மீன் வகைகள் பத்தி அற்புத தகவல் !


மீன் வகைகள் பத்தி அற்புத தகவல் ! 


மீன் பத்தி சொல்ற அளவுக்கு பெரிய அனுபவம் எல்லாம் இல்லை ஆனா தெரிஞ்ச வரைக்கும் உங்களோட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த இழை குற்றம் குறை இருந்தால் சுட்டி காட்டுங்க திருத்திக்களாம் . 
 கடல் மீன் , ஆத்து (ஏரி)மீன் , குளத்து மீன் இப்படி வகைப்படுத்தலாம் 

மொதல்ல கடல் மீன்ல இருந்து வரலாம் . பொதுவா  மீன்ல என்ன மாதிரியான டிஷ் செய்வாங்கன்னா மீன் குழம்பு , வறுவல் (தவா வறுவல் , டீப் ஃப்ரை) , தொக்கு , புட்டு , சுட்டு சாப்பிடறது (BBQ) ஏன் பிரியாணி வரை பண்றாங்க . மீன்  சாப்பிடறதுனா  செதில் வகை மீன்கள் தான் உடம்புக்கு ரொம்ப நல்லது , 

செதில் இல்லாத மீன்கள் ஆபத்தானதில்லை ஆனா தொடர்ச்சியா சாப்பிடறதை தவிர்பது நல்லது.  பெரிய சைஸ் மீன்களை விட சின்ன சைஸ் மீன்களுக்கு முக்கியத்துவம் தரது  நலம் 

மீன்ல ராஜான்னா அது வஞ்சிரம் மீன் தான் சைஸ் கூட கூட விலையும் கூடும் மீன் வகை இது மலையாளத்துல நெய் மீன் 3/N🙏இங்கிலீஸ்ல Spanish mackerel- king mackerel - seerfish னு சொல்லுவாங்க 
திருநெல்வேலி மாவட்டத்துல ஷீலான்னு சொல்றாங்க இது செதில் இல்லாத மீன் இதை அதிகமாக மக்கள் விரும்ப முக்கிய  காரணம் சுவை , முள் குறைவு முள்ளை எடுத்து சாப்பிடனும்னு அவசியமில்லை  அப்படியே சாப்பிடலாம் 

அடுத்ததா சங்கரா - செம்மீன் 

மலையாளத்துல கிளிமீன் , இங்கிலீஸ்ல Red-snapper  மீனை பாக்கலாம் , செதில் உள்ள மீன் இது சுவையான மீன் வகைல இதுவும் ஒன்னு முள் அதிகமா  இருக்கும் கவனமா சாப்பிடனும் , குழம்பு , வறுவலுக்கு ஏத்த  மீன், 

இதே மாதிரி சின்னதா ஒரு மீன் இருக்கும் நவரை 
இதான்  நவரை 

சீலா - ஷீலா- barracuda fish இதுல பல வகை இருக்கு குழி சீலா , கரை சீலா , ஓலைச்சீலா , லோப்பு சீலா எல்லாமே barracuda குடும்பத்தை சேர்ந்தது , செதில் உள்ள மீன் எல்லா டிஷ் வகையும் செய்யலாம் இதுல புட்டு செஞ்சி சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும் முள் குறைவா  இருக்கும் 

மத்தி - sardine -pilchards 

மளையாளத்துலயும் மத்தி தான் செதில் உள்ள  சுவையான மீன். இதை சமைச்சா வீடே ஒரு வித மனம் வரும் சிலருக்கு பிடிக்காது இந்த வாசம் . ஒமேகா-3 சத்து அதிகம் உள்ள மீன் விலையும் குறைவா  தான் இருக்கும் , குழம்பு வறுவல்க்கு ஏத்தது முழுசா தலை முதல்  சாப்பிடலாம் 

நொணலை-சாளை -sardine 

இது மத்தி மாதிரியே இருக்கும். செதில் உள்ள மீன்  இதையே மத்தினு சொல்லி விப்பாங்க , மத்தி வயிறு பகுதி உருண்டா மாதிரி இருக்கும் , சாளை வயிறு பகுதி ஒட்டினா மாதிரி இருக்கும்  . மத்தியும் இதுவும் சுவைல ஒரே மாதிரி தான் இருக்கும் மத்தி குடும்ப வகையை சார்ந்தது
 

கிழங்கான் - lady fish 

இந்த மீன் மாதிரியே கொஞ்சம் கறுப்பா இருக்கும் அதையும் கிழங்கான்னு தான் விப்பாங்க அதுல  முள் அதிகமா  இருக்கும் கவனமா சாப்பிடனும் , இது வெள்ளை கிழங்கான்னு சொல்லுவாங்க fish finger செய்யறதுக்கு ஏத்த  ஒரே மீன் இதுதான் நெத்திலி மாதிரி சுவை அள்ளும் 

நெத்திலி -Anchovy

 சிறிய வகை மீன் குழம்பா வைக்கறதை விட 65 மாதிரி செஞ்சி சாப்பிடலாம் . இதோட கருவாடு மீனை விட மொறுமொறுப்பா இருக்கும் . இதை ஒவ்வென்னா  சுத்தம் பண்றது பெரும்பாடு
சட்டில  கல்லு உப்பை போட்டு மொத்தமா ஒரு சுழட்டு சுழட்டுனா போதும் 


வாளை - Silver scabbard fish 

இதை மீனா சாப்பிட்டதை விட கருவாடா சாப்பிட்டவங்க தான் அதிகம் இருப்பாங்க , செதில் இல்லாத வகை மீன் இது இதோட தோல்ல சுண்ணாம்பு மாதிரி பளபளப்பா ஒரு கோட்டிங் இருக்கும் கல்லுல நல்லா தேய்ச்சி கழுவின பிறகு உபயோகப்படுத்தனும் 

கோலா - coramandal flying fish 

படத்தை பார்த்தவே தெரியும் இந்த மீன் சில ஆடி தூரம் வரைக்கும் பறக்கும் மத்தபடி விசேசமான சுவையெல்லாம் கிடையாது . செதில் உள்ள மீன் . 

கானாங்கத்தை- அயிலா- dolphin fish -
 
நல்ல சதைப்பற்று உள்ள மீன் இதை சாப்பிடறப்போ வித்தியாசமான காரல் சுவை வரும் . கேரளால அதிகம் விரும்பி வாங்கற மீன் , செதில் இல்லா வகை மீன்.

Comments