முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்....
முந்நீர் பழந்தீவு-
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம்,
பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும்
மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.
முந்நீர் பழந்தீவு-2/5
போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர்...
முந்நீர் பழந்தீவு-3/5
மேகங்கள் கருவுற்று நேரடியாகக் கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று. சோழர்களே 20,000 தீவுகளை பழந்தீவு என்கிறார்கள் .
இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள்நீரில் மூழ்கி விட்டனஎனப்படுகிறு
முந்நீர் பழந்தீவு-4/5
ஆனால் 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ச் சுற்றி ஏழு தீவுகள் இருந்ததாக
செய்தி செப்பேடு ஒன்றில் இருக்கிறது
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில் நமது தமிழ் நாட்டைக்குறித்த விவரிப்பில் சுவையானத தகவல் சில கிடைக்க்கிறது .
முந்நீர் பழந்தீவு-5/5
அந்தப்பழனி செப்பேட்டில் உள்ள அப்போதைய அரசரைப்பற்றிய ப்பற்றிய விவரிப்பு இது . இதை அப்போது 15 நூற்றாண்டில் இருந்த வரலாறு , நிலவியல் பற்றிய ந்மநம்பிக்கையை தெரிவிப்பதாகக்கொள்ளலாம்.
முந்நீர் பழந்தீவு-6/5
வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில்.....
முந்நீர் பழந்தீவு-7/5
நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி" ............என்கிறது ,
இவ்வாறு பதினென் பூமியும் ஏழு தீவும் என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அந்த ஏழு தீவுகள் எவைகளாக இருக்கும் ?..
லைடன் தீவு(வேலணை),
நயினாதீவு(மணிபல்லவம்),
புங்குடுதீவு,
காரைநகர்,
நெடுந்தீவு,
அனலைதீவு,
எழுவைதீவு
என்றென்றும் அன்புடன்...
Comments
Post a Comment