- பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
சில:
பெண் பொருளாதார மேம்பாடு பற்றிய
சட்டங்கள்
- வரதட்சணை
ஒழிப்பு சட்டம் 1961 -
வரதட்சணை
கொடுப்போரையும் வாங்குபவரையும் தண்டிக்கும் சட்டம் . தண்டனை – 5 வருட சிறைத் தண்டனை.
15000 ரூபாய் அபராதம்.இச்சட்டம் பெரும்பாலான மணமான பெண்களை வரதட்சணை சாவிலிருந்து காப்பற்றி
வருகிறது. பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கும் மாறினால் அவர்களை ஒரு சுமையாக
பெற்றோர் கருத மாட்டார்கள் .
- இந்திய
வாரிசுகளுக்கும் சட்டம், 1925 (1925 39)-
-மனைவியையும்,பெண் குழந்தைகளையும் வாரிசுகளாக்கிய சட்டம்
- குறைந்தபட்ச
கூலி சட்டம் -
ஆண்களுக்கு சமமான
(வேலைக்கான) ஊதியம் -தினசரி 5 மணி நேர வேலைக்கு
ரூ 85 ஊதியம் .
- தொழிற்சாலைகள்
சட்டம், 1948 -
தொழிலாளர்களின்
மேம்பாட்டிற்காக உருவான இச்சட்டம் மகளிர் நலத்தையும் குறிப்பிடுகிறது . சம ஊதியம் சட்டம், 1976 -வேலைவாய்ப்பு விஷயத்தில் பெண்களுக்கு எதிரான, பாலியல் அடிப்படையில் பாகுபாடுஇல்லாது ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கும் நோக்கம் கொண்டது.
பெண் சமூக
மேம்பாடு பற்றிய சட்டங்கள்
- சதி (தடுப்பு)
சட்டம்,
1987 -
இந்துமத சடங்கான சதி என்னும் விதவைகளை இறந்த கணவனின் உடலோடு எரித்தல் ,சதிகளுக்கு கோவில் கட்டி வணங்குதல் போன்ற மூட பழக்கங்களை அறவே அழிக்க உதவும் இச்சட்டம் ,இதை மீறுவோருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப் படும்.
பெண்களை அநாகரிகமாக காட்டுவதை தடை செய்யும் சட்டம், 1986- மகளிரை வர்த்தக விளம்பரங்களிலும் ,ஊடகங்களிலும் மரியாதை குறைவாக சித்தரிக்கும் முறையை தடை செய்ய வேண்டி இச்சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
மீறினால் முதல்
குற்றத்திற்கு அதிக பட்சமாக 2 ஆண்டு சிறையும்,2000 ரூபாய் அபராதம் ,இரண்டாவது குற்றத்திற்கு அதிக பட்சமாக 5
ஆண்டுசிறையும்,10,000 ரூபாய் அபராதம் வழங்கப் படும் .
குழந்தை திருமண
கட்டுப்பாடு சட்டம், 1929
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
பதினெட்டு
வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மணம் செய்தல் கூடாது .
இந்து மதம் தத்து எடுத்தல் & பராமரிப்பு சட்டம், 1956 - ஒரு இந்து மதத்தை சார்ந்த மனைவியையும் ,குழந்தையையும் தன்வாழ்நாள்
காலம் முழுவதும் அவரது கணவரால் பராமரிக்கப் படும் உரிமையை இந்த சட்டம் தருகிறது .
மருத்துவம்
மற்றும் பெண்களின் உடல் நலம் குறித்த சட்டங்கள்
2011 ஆம் ஆண்டின் ,மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் பெண் விகிதாசாரம் 1000:940 ஆக உள்ளது.
பெண்களுக்கு எல்லா
உரிமைகளை அரசாங்கம் தந்திருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் பிறக்கும் உரிமைகூட
அவர்களுக்கு மறுக்க
படுவது
கவலைக்குரியதுதான்.பெண் சிசுக் கொலையை தடுக்கப் பல முயற்சிகள் எடுக்கப் பட்டு
வருகின்றன.
அவற்றுள் ஒன்று
-குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் (ஒழுங்குமுறை மற்றும் தடுப்பு) சட்டம், 1994 -
மரபணு அல்லது வளர்சிதை மாற்ற குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட பிறவி குறைபாடுஅல்லது பாலியல் தொடர்புகோளாறுகள்
கண்டறிவதற்கான நோக்கத்திற்காக குழந்தை பிறப்புக்கு முன் கண்டறியும் நுட்பங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும்இது போன்ற
தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இச்சட்டம் உதவும் .இதைக்கொண்டு பிறக்கும் சிசுவின்
பாலியலை
கண்டு பிடித்து பெண் சிசுவைக் கர்ப்பத்திலேயே களைக்கும் கொடுமையை தடுப்பதே நோக்கம்.
மீறினால் அதிக
பட்சமாக 3 ஆண்டு சிறையும்,100000 ரூபாய் அபராதமும் வழங்கப் படும் -
மருத்துவ முறையில்
கர்ப்பத்தை அழிக்க வகை செய்யும் சட்டம் 1971/2002 - 12 முதல் 24 வார பெண்ணின் கர்ப்பத்தைபிறவிக் குறைபாடு
போன்ற மருத்துவக்
காரணங்களுக்காக அழிக்கலாம் என்ற விதியை மீறி பெண் சிசு வதை செய்ய இந்த முறையை
துஷ்ப்ரயோகம்
செய்வோரை தடுக்க இச்சட்டம் உதவும்.அதே
போல் கர்ப்பிணி பெண்களின் உயிரை மருத்துவ காரணங்களுக்காக காக்கவும்
வழி வகுக்கிறது
.இதன் வாயிலாக கருக்கலைப்பு செய்யும் உரிமை சட்ட
ரீதியாக பெண்களுக்குத் தரப் படுகிறது.
தேசிய மகளிர் ஆணையம் சட்டம் 1990 த்தின் படி ஒரு அமைப்பு நிறுவப்பட்டு பெண்டிருக்கான
சமூகப்பிரச்சனைகளை களையப் பாடுபடும்.
அனைத்து வகை பெண்
சம்பந்தமான குற்றங்களை விசாரிக்கவும்,நீதி அளிக்கவும் , நஷ்ட ஈடு தரவும் இதற்கு அதிகாரம் இருக்கிறது
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
பரத்தமை தடுப்பு சட்டம் 1986/2006- பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக
பலவந்தமாகவன்கொடுமைக்கு ஆளக்குவதை தடுக்க
வந்த சட்டம் இதுவாகும்.இந்த குற்றத்திற்கான
தண்டனை மூன்று மாத சிறை,30000 ரூபாய் அபராதம்.
குழந்தைகளை கடத்தி பாலியல் வியாபார
நோக்கத்தோடு விற்கும் குற்றவாளிகளுக்கு 7 வருட கடுங் காவல் சிறைத் தண்டனை கொடுக்கப் படும்.
பெண்களை கேலி
செய்தலை தடுக்கும் சட்டம் : பெண்களின்
உணர்வுகளை மதிக்காது தகாத வார்த்தைகளால் திட்டுதல் , தேவையில்லாத ஆபாச சைகைகள் செய்தல், கண்ணியமற்ற உடல் மொழி போன்ற குற்றங்களுக்கு இந்திய பீனல் சட்டத்தின் மூலமாகவும் முதல் குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் .2000 அபராதமும் ,அடிக்கடி செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் .5000 அபராதமும் தண்டனையாகும் .
வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் 2005 சட்டம்-
பெண்களை வழக்கமாக தாக்குதல் அல்லது கொடுமை செய்தல் அல்லது முறையற்ற வாழ்வு நடத்த வற்புறுத்துதல் ,காயப் படுத்துதல் போன்ற குற்றங்களை தடை செய்ய இச்சட்டம் உதவுகிறது .தண்டனை- ஒரு வருட சிறை ,10000 ரூபாய் அபராதம்
வேலைக்கு போகும்
மகளிர்க்கு பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் ஒன்று புதிதாக, கடந்த மாதம் இயற்ற பட்டுள்ளது .பணிக்குச் செல்லும் .பெண்கள், பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்க்கும்) சட்டத்தின்படி
பெரிய கர்போரட் அலுவலகத்தில்
பணி புரியும் பெண்கள் ஆக இருந்தாலும் சரி, அரசு அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் ஆக இருப் பினும் சரி,வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ஆக இருந்தாலும் சரி, பெண்விவசாய கூலித் தொழி லாளர் ஆக இருந்தாலும் சரி, பாதுகாப்புப் பெறுவர்.
இதன் படி குறைகளை
விசாரிக்க ஒரு குழு அமைக்கப் பட்டு , 90 நாட்களுக்குள் அதன் தீர்ப்புப் படி தக்க தண்டனை தரப் படும்.
கற்பழிப்பு எதிர்ப்புச் சட்டம் 2013 - இதன் படி பெண்களை மானபங்கம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையும்,வாழ்நாள் முழுதும் கடுங்காவல் தண்டனையும் அளிக்கப்
படும்.அமில வீச்சு ,பெண்டிரை தொடர்ந்து போய் தொந்திரவு செய்தல்,போன்ற பல பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இச்சட்டத்தின் மூலம் தண்டனை தரப் படும்.
இத்தனை சட்டங்கள்
பின்னர் ஏன் அத்தனை வன்முறைகள் ?
பெண்களுக்கான எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும்
அவற்றை நடைமுறைப் படுத்தலில் சிக்கல்கள் உள்ளன.
இந்திய அரசியல்
சாசனத்தில் அடிப்படை உரிமைகள் தொடங்கி, எல்லாவித சமத்துவமும் பெண்டிருக்கு அளிக்க பட்டுள்ளது.
எண்ணற்ற சட்டங்களும் ,ஆணையங்களும் இருந்தாலும் ஆணாதிக்க மனப்பான்மை, சமுதாயத்தில்
மாறாதவரை மகளிருக்கான
பாதுகாப்பு ,மேம்பாடு எல்லாம் கானல் நீர்தான்.
வீட்டிலே பூட்டி
கிடந்த பெண்களை தோளோடு தோள் கொடுத்து, பொது வெளியில் சமானமாக பங்கேற்பதை ஏற்கும் மனப் பக்குவத்தை
நம் சமூகம் இன்னும் அடையவில்லை.
”நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச்
செருக்கும்
என்று வாழும் புதுமைப் பெண்களைத் தவறாக
புரிந்து கொண்டு, போட்டியாக பாவித்து இதுவரை அடக்கி ஆண்ட
சமூகம் சமமாக நடத்த தெரியாமல் தவிக்கிறது.
சங்க காலத்திலேயே
ஔவையார் பெண்களின் பாதுகாப்பை பற்றி கீழ்கண்டவாறு பாடியிருக்கிறார்.
“
நிலம் காடாக
இருக்கலாம், நாடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம் மேடாக இருக்கலாம்.
ஆண்கள் எங்கே நல்லவர்களாக
இருக்கிறார்களோ
அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும் நல்லவளாக இருக்க முடியும்.” :
எவ்வழி நல்லவர்
ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நிலனே (187 : 3- 4)
ஆண்களுக்கு
ஒழுக்கத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை இன்றைக்கும் பொருந்தும் .
மேலும், பெண்கள் நிலை மேம்பட, பள்ளி ,கல்லூரிகளில் பெண்களை மதிக்கக் கற்றுத்தரப் பட வேண்டும்.குடும்பங்களுக்குள்
மகளிரை
சரி சமமாக நடத்த வேண்டும்.அலுவலகங்களிலும் ,பொது இடங்களிலும் மரியாதையாக பெண்களை நடத்த வேண்டும் .
அதற்கு ஊடகங்களில்
பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கப் படுவது அறவே நிறுத்தப் பட வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் ,அரசாங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் வரம்பு மீறல்களை கண்காணிப்பு செய்ய வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்புக் கலைகளில் பயிற்சி தரப் பட வேண்டும்.
பெண்கள் தங்களுடைய
கல்வித் திறனை உயர்த்தி ” எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்” என்று தனது
உரிமைகளை பற்றிய
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஆடவர், பெண்களை சக மனுஷிகள் என்பதை நெஞ்சில்
நிறுத்தி கௌரவமாக நடத்த வேண்டும்
“ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வதால்!
அறிவி லோங்கிஇவ்
வையம் தழைக்குமாம்”
அப்போதுதான்
மானுடம் வெல்லும்
Comments
Post a Comment