முதல் திருமணத்தை
கணவர் மறைத்திருந்தால் 2ஆவது
மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே: உச்ச நீதிமன்றம்
புது தில்லி
முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றாலும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவியையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
""இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.
எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-ன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்டபூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-யை உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

Comments
Post a Comment