எப்படிப் புகார் செய்வது..........................

IFC/MIGA திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க உதவ, உலகெங்கிலும் உள்ள சமூகங்களுடனும் சிவில் சமூக அமைப்புகளுடனும் CAO பணியாற்றுகிறது. CAOவிடம் எப்படிப் புகார் செய்வது என்பதையும், இந்தச் செயல்முறையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் இந்தப் பிரிவு விளக்குகிறது. எங்களின் பணிகள் பற்றியும், எந்த வகையான தீர்வுகளைப் பெற நாங்கள் உதவ முடியும் என்பது பற்றியும் மேலும் அறிய எங்களின் வழக்குகளைப் பாருங்கள்.

CAO என்பது என்ன?

CAO என்பது, உலக வங்கிக் குழுவின் தனியார்த் துறை நிறுவனங்களான சர்வதேச நிதிக் கழகம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் திட்டங்களுக்கான தனிப்பட்ட உதவி அமைப்பு ஆகும். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தனியார்த் துறையை மேம்படுத்துவதன் மூலம், IFC மற்றும் MIGA வறுமைக் குறைப்புக்கு வழி செய்கின்றன. ஒரு IFC அல்லது MIGA திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நம்பினால், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் CAOவின் உதவியை கோரலாம். சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை மேம்படுத்தும் உண்மையான தீர்வுகளைக் கண்டறிய, ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா முக்கிய தரப்பினருடனும் CAO பணியாற்றுகிறது.

யார் புகார் செய்யலாம்?

IFC அல்லது MIGA திட்டத்தினால்(ங்களினால்) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ, அல்லது பாதிக்கப்படக்கூடும் என்றோ நம்பும் எந்த தனிநபரோ, குழுவோ, சமூகமோ, அல்லது இதர தரப்பினரோ CAOவிடம் புகார் செய்யலாம். பாதிக்கப்பட்டிருப்பவரின் சார்பில், ஒரு பிரதிநிதியாலோ அல்லது அமைப்பாலோ புகார் செய்யப்படலாம்.

புகார் செய்வதற்கான திட்ட அலகுகள் என்ன?

ஒரு புகார் பரிசீலிக்கப்பட, தகுதிக்கான 3 எளிய திட்ட அலகுகளை CAO வைத்திருக்கிறது:
புகார், ஒரு IFC அல்லது MIGA திட்டம் தொடர்பானது (பரிசீலனையில் இருக்கும் திட்டங்கள் உட்பட)
புகார், அந்த திட்டத்துடன்(ங்களுடன்) தொடர்புடைய சமூக மற்றும்/அல்லது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது
சமூக மற்றும்/அல்லது சுற்றுசூழல் பிரச்சனைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ, அல்லது பாதிக்கப்படக்கூடும் என்றோ புகார் செய்பவர் நம்புகிறார்
எந்த வகையிலான புகார்கள் ஏற்கப்படுகின்றன?
தகுதிக்கான இந்த 3 திட்ட அலகுகளை பூர்த்தி செய்யாத புகார்களை CAOவினால் ஏற்க இயலாது. புகார்கள் பிற நிதி அமைப்புகள் தொடர்பானவையாக இருந்தால் (அதாவது, IFC அல்லது MIGAவாக இல்லாமல்), புகார் செய்பவரை CAO அதற்குரிய சரியான அலுவலகத்துக்கு அனுப்புகிறது.
ஏமாற்றுதல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் உலக வங்கியின் ஸ்தாபன நேர்மை அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. . IFC மற்றும் MIGAவின் வாங்குதல் முடிவுகள் தொடர்பான புகார்களையும் CAOவினால் மறுஆய்வு செய்ய முடியாது. .
தீய எண்ணம் கொண்ட, முக்கியத்துவம் அற்ற, அல்லது ஆதாயம் பெறுவதற்காக போட்டியிடும் வகையிலான புகார்களை CAO ஏற்றுக் கொள்வதில்லை.

புகார் செய்ய ஆதார சாட்சி எதுவும் தேவையா?

இல்லை, புகார் செய்ய ஆதார சாட்சி எதையும் நீங்கள் அளிக்க வேண்டியதில்லை. ஆயினும், உங்களின் வாதத்தை ஆதரிக்கும் வகையிலானவற்றை அளிக்க நீங்கள் விரும்பினால், அவை வரவேற்கப்படுகின்றன.

இது இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளலாமா?

ஆம். CAO இரகசியத்தன்மையை தீவிரமாக பின்பற்றுகிறது என்பதுடன், கேட்டுக் கொள்ளப்பட்டால், புகார் செய்பவரின் அடையாளத்தை நாங்கள் வெளிய்ட மாட்டோம். இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படும் பட்சத்தில், புகார் கையாளப்படும் முறை CAO மற்றும் புகார் செய்பவர் ஆகிய இருவராலும் ஒப்புக் கொள்ளப்படும். மேலும், புகார் செய்பவரால் இரகசியமான முறையில் அளிக்கப்படும் தகவல்கள் அவரின் அனுமதியின்றி வெளியிடப்பட மாட்டாது.

நான் ஒரு புகார் அளித்தால், அடுத்து என்ன நடக்கும்?

புகார் எந்த மொழியில் அளிக்கப்பட்டதோ, அந்த மொழியிலேயே உங்களது புகாரைப் பெற்றதை CAO உறுதிப்படுத்தும். புகார் மேற்கொண்டு மதிப்பிடத்தக்கதா என்பதை 15 வேலை நாட்களுக்குள் (புகார்கள் மற்றும் ஆதார ஆவணங்களை மொழிபெயர்க்கத் தேவையாகும் நாட்களைச் சேர்க்காமல்), CAO உங்களுக்குத் தெரிவிக்கும். தகுதி பெற்றால், கவலைக்கிடமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவ CAO உங்களுடன் இணைந்து எவ்விதம் பணியாற்றும் என்பதை விளக்கும் தகவல்களை நீங்கள் பெறுவதுடன், ஒரு CAO வல்லுநர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வார்.

புகார்களை கையாளும் செயல்முறை எவ்விதம் இயங்குகிறது?

ஒவ்வொரு புகாருக்கும் CAO ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது என்பதுடன், உரிய நேரத்தில் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. CAOவின் தகுதிக்கான 3 திட்ட அலகுகளை ஒரு புகார் பூர்த்தி செய்யுமானால்:
எல்லாத் தரப்பினரும் இணைந்து எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சுமுகமான தீர்வு காண முடியுமா என்பதைக் கண்டறிய CAO ஆம்புட்ஸ்மேன் முதலில் புகார் செய்பவர், திட்ட ஆதரவாளர், மற்றும் உள்ளூரில் இருக்கும் இதர பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருடன் செயல்படுவார்.

ஒரு பிரச்சனைக்கு எவ்விதம் தீர்வு காண்பது என்பது குறித்து எல்லாத் தரப்பினரும் ஒப்புக் கொள்ள விரும்பாவிட்டாலோ அல்லது முடியாவிட்டால், ஒரு தணிக்கை தேவையா என்பதை தீர்மானிக்க பொருத்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளுடன் IFC/MIGA இணங்குகிறதா என்பதை சரிபார்க்கும் செயலை CAO மேற்கொள்கிறது.
செயல்முறை மற்றும் கால அட்டவணை பற்றிய விவரங்களுக்கு CAOவின் செயல்பாட்டு வழிமுறைகளைப் பார்க்கவும்.

CAO ஆம்புட்ஸ்மேன் ஒரு புகாரை எப்படி கையாள்கிறார்?

CAO ஆம்புட்ஸ்மேன் நிலைமையை மதிப்பிட்டு, அந்தப் புகாருக்கு தீர்வு காணும் சிறந்த வழிகளை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உதவுகிறார். ஒரு புகாரின் தகுதி குறித்த மதிப்பீட்டை ஆம்புட்ஸ்மேன் செய்வதில்லை என்பதுடன், தீர்வுகளை கட்டாயப்படுத்தவோ அல்லது குறை காணவோ செய்யாது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டறிய எங்களின் வல்லுநர்கள் எல்லாத் தரப்புகளுடனும் இணைந்து செயலாற்றுவர். இணைந்து செயலாற்றி உண்மையைக் கண்டறிதல், முக்கிய தரப்பினரிடையே விவாதங்களை நடத்துவது, தரப்பினரிடையே ஏற்படக்கூடிய சச்சரவுகளை மத்தியஸ்தம் செய்வது, அல்லது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்வது அல்லது இணைந்து கண்காணிக்கும் திட்டம் ஆகியவற்றை இது கொண்டிருக்கக்கூடும். சச்சரவு மதிப்பீடு, மத்தியஸ்தம் செய்தல், மற்றும் பலதரப்பு உதவி ஆகியவற்றில் நிபுணத்துவம் உடைய, மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணலில் (ADR) CAO வல்லுநர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். நாடு-குறிப்பான அனுபவம் உள்ள, மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான உதவி மற்றும் இணக்கம் உண்டாக்குவதில் நிபுணத்துவம் உள்ள தனிப்பட்ட மத்தியஸ்தர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களது பணியின் உதாரணங்களைப் பார்க்க எங்களது வழக்குகளைப் பார்வையிடவும்.

CAO இணக்கத்தின் பங்கு என்ன?

எங்களது ஆம்புட்ஸ்மேனால் புகாருக்கு தீர்வு காண முடியாவிட்டால், CAO இணக்கம் வழக்கை கையாளும். இந்த "இணக்கப் பரிசோதனை" நடத்தப்படுவதன் காரணம், புகாரில் கூறப்பட்டிருக்கும் பிரச்சனைகள், அந்த திட்டம் தொடர்பாக IFC அல்லது MIGAவின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை பற்றி கேள்விகளை எழுப்புகிறதா என்பதை மதிப்பிடுவதாகும். CAO ஒரு ஆய்வை நடத்துகிறது என்பதுடன், ஒரு தணிக்கை தேவை என்றால் பிரச்சனைகளை ஆராய ஒரு தனிப்பட்ட குழு அமைக்கப்படுகிறது. கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், திட்டம் மீண்டும் இணங்கும் வரை பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதை CAO கண்காணிக்கிறது. முக்கியமாக, IFC மற்றும் MIGA மீதான கவனத்தை இணக்கம் தணிக்கை செய்கிறது - திட்ட ஆதரவாளரை (IFC/MIGAவிடமிருந்து ஆதரவு பெற்ற தனியார்த்துறை கிளையண்ட்) அல்ல.

எனது புகாரை நான் எப்படி, எங்கே அளிப்பது?

புகார்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும், அவை எந்த மொழியிலும் இருக்கலாம். புகார்கள் மின்னஞ்சல், தொலைநகல், அஞ்சல்/தபால் மூலமாக அனுப்பப்படலாம், அல்லது வாஷிங்டன் DCயில் உள்ள CAOவின் அலுவலகத்தில் சேர்க்கப்படலாம். ஒரு புகாரை எப்படி எழுதுவது என்பதற்கான வழிகாட்டுதலுக்கு, மேலே உள்ள மாதிரி இணக்கக் கடிதத்தைப் பார்க்கவும்.
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
புகார் அளிப்பது பற்றியோ அல்லது மக்கள் சமூகத்துடனான CAOவின் பணி பற்றியோ உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், தயவு செய்து எங்களை அணுகவும். உங்களிடமிருந்து கேட்க விழைகிறோம்:

Office of the CAO
2121 Pennsylvania Avenue, NW
Washington, DC 20433, USA
தொ.பே.: + 1 202 458 1973
தொ.ந.: + 1 202 522 7400
மின்னஞ்சல்: cao-compliance@ifc.org

Comments