பாலியல் குற்றங்களுக்காண முற்றுப்புள்ளி!

பாலியல் குற்றங்களுக்காண முற்றுப்புள்ளி!

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் கெய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்' என்ற பாரதியின் கூற்று தற்போது கேள்விக்குரியாகிவிட்டது. சம உரிமை சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த பாலியல் வன்முறைகள் இப்போதெல்லாம் எங்கெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆறு வயதோ அறுபது வயதோ! அதெல்லாம் அந்த காமுகர்களுக்கு தேவையில்லை!, பெண்கள் இன்னும் போகப்பொருளாக,சதைப்பிண்டமாக மட்டுமே பார்க்கும் மனப்போக்கு பாமரன் என்றில்லாமல் படித்தவனிடம்தான் அதிகம் காணப்படுகிறது.பாலியல் வண்முறைகளுக்கு என்னவிதமான அளவுகோலை இந்த ஆணாதிக்க சமூகம் வறையறுத்து வைத்திருக்கிறது?
கற்பு, பண்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை பெண்கள் மீது புகுத்திவிட்டு அந்த கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்துவிட்டு கறபழிப்பு போன்ற பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதும் ஆண்வர்க்கமே!

     காட்டுமிராண்டித்தனமான ஒரு காலகட்டத்திற்கு இந்த சமூகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கற்பு என்பது பெண்களுக்குமட்டுமானது, அது ஆண்களுக்கானதும்தான என்பதை அறவே மறந்துவிட்டார்களா? அல்லது மறைத்துவிட்டார்களா? என்றே கூறவேண்டும்! குற்றங்கள் செய்வதிலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் தப்பிப்பதில் மட்டுமே இங்கு ஜெனநாயகம் செயல்படுகிறது. அதிலும் சமீபகாலமாக அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள், ஒழுக்கமான இந்திய பண்பாட்டின்மீது கடும் கறையை படிய வைப்பது கண்டனத்திற்குறியது.பச்சிளம் குழந்தைகள் முதல் பள்ளிழந்த பாட்டிகள்வரை காமவெறிபிடித்த காட்டுமிராண்டிகளுக்கு இறையாகும் கொடுமையான கேவலம் இன்றும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

'வன்முறை மனதளவில் மட்டுமே' என்ற ஆங்கில வாசகம் ஒன்று உண்டு. வன்முறையின் இந்த வரைமுறையினை ஒரு தனிமனிதன் உணரும்போது பெருவெளியில் மீறல்கள் இருக்க வாய்ப்பில்லை,ஆனாலும் வக்கிரம் நிறைந்த இவ்வுலகில் இது சாத்தியம் அல்ல. பெண் குழந்தைகள்,இளம்பெண்கள் மூதாட்டிகள் ஆகியோரும் சக மனுசிகள் என்பதை மறந்துவிட்ட மாபாவிகளின் கொடூரமான பாலியல் வன்முறை அரங்கேற்றங்களே அனுதினமும்; தலைப்புச் செய்திகளாய் வந்துகொண்டிருக்கிறது! இதுபோன்ற கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கடுமையான வழிமுறைகளில் உடனடியாக தண்டித்தால் மட்டுமே மேற்கண்ட குற்றங்கள் ஓரளவேனும் குறைந்திருக்கும்;.

     'நிர்பயா' கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதியோ அவள் எங்களுக்கு இணங்கியிருந்தால் யவளை எவ்வித துன்பமுமின்றி துடிக்க துடிக்க கற்பழித்து தூக்கி எறிந்திருக்கமாட்டோம் என துணிச்சலாய் பேட்டி கொடுத்திருக்க மாட்டான்.இப்படியொரு மாபாதக சையலிலும் ஈடுபட அஞ்சியிருப்பான்.

     இவன் போன்றவர்களை உடனுக்குடன் கடுமையாக தண்டித்திருந்தால் இவனுக்கு பிறகும் இன்றும், காரில் இளம்பெண் கற்பழித்து கொலை, வீடுபுகுந்து மூதாட்டி கற்பழிப்பு. நான்கு ஐந்து வாலிபர்களால் இளம்பெண் கொடூரமாய் கற்பழித்து கொலை. பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள், போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல் தடுத்திருக்கமுடியும்....

இத்தனை வருடங்களுக்கு பிறகு தற்போதாவது  நீதிமன்றங்களும் அரசும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஓரளவேனும் விழித்துக்கொண்டு செயல்படுவது வரவேற்கத்தக்கதே!

     1997 ஆம் ஆண்டே விசாகா வழக்கு தீர்ப்பில் வதுத்தப்பட்ட விதிகளும் நெறிமுறைளும், சட்டமாக்க சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா வழக்கின் மூலமே தீPர்வு காணப்பட்டுள்ளது!

     முன்பெல்லாம் பாலியல் தொடல்பான துன்பத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்கள் முதலில் அலுவலகத்தில் உள்விசாரணை, அடுத்து தேசிய தனித உரிமை ஆணையம்,தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் என அலைந்து திரிந்து பின் காவல்துறையில் புகார் பதிவுசெய்து நீதிமன்றத்தில் வழக்குநடத்தி இறுதியில் தண்டனை பெற்றுத்தருவதற்குள் சில வழக்குகளில் குற்றவாளி செத்தேவிடுகிறான்! எனவேதான் அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் பாலியல் குற்றங்களில் புதிய நெறிமுறைகறை  வகுத்துள்ளது. அதன்படி
1.பாலியல் துன்புறுத்தல்கள் என்பது விரும்பப்படாத பாலுணர்வுகொண்ட நடத்'தையும் நடவடிக்கைகளும்(நேரடி,மறைமுக) ஆகும்.
(அ).தொடுதல மற்றும் நெருங்கிப்பழக முயலுதல்.
(ஆ).பாலுறவிற்கு வேண்டுதல் அல்லது வற்புறுத்துதல்.
(இ).பாலுணர்வு பொருள்படும் சொற்களை பயன்படுத்துதல்.
(ஈ).ஆபாச படங்களை காண்பித்தல்.
(உ).இவைபோன்ற பாலுணர்வை வெளிப்படுத்தும் உடல் ரீதியாக     வார்த்தைகள் மூலமாக, வார்த்தைகளற்ற,சைகைகள் மூலமான எந்த நடத்தையும் இதில் அடங்கும்.

மேற்சொன்ன எவற்றையும் பணியிடத்தில் ஒரு பெண் சந்திக்க நேர்ந்ததென்றால் அதனால் அவள் வேதணைப்பட்டு, அவமானப்பட்டு உடலும் மனதும் பாதிக்கப்பட நேர்ந்தால், அவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் எனக்கொள்ளப்பட வேண்டும்.இத்தகைய கேவலமான வற்புறுத்தல்களுக்கு தான் இணங்காவிட்டால், பணியில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றுமு;, தனது வேலைக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும், அல்லது பணி உயர்விற்கு தடை ஏற்படும் என்றும், தான் பல வழிகளிளும் பழிவாங்கப்படுவோம் என்றும், வேலையில் கவனம் செலுத்தமுடியாத நிம்மதியற்ற அச்சுறுத்தும் சூழல் உருவாகும் என்றும் அந்தப்பெண் அஞ:ச நேர்ந்தால், அந்த நிலைமை பாலியல் துன்புறுத்தல் எனக்கொள்ள வேண்டும். அதிலும் இ;த்தகைய வற்புறுத்தல்களிளும், அவமானகரமான செயல்களிளும் ஈடுபடுபவர் உயர் அதிகாரியாக இருந்தால் அவரது அச்சங்கள் அனைத்தும் நியாயமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.

     ஆகவேதான் பணியிடங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களை தவிற்பதற்கு நிர்வாகத்துறையின் பொறுப்புகள் என்ன என்பதை ஆணித்தரமாக அறிவுறுத்துவது மட்டுமல்லாமல் தொடர்பான குற்றங்களை தாமதப்படுத்தாமல் உடனடியாக நியாயமான முறையில் விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனைகளையும் வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது விசாகா நெறிமுறைகள்.



ராசா துரியன்
வழக்கறிஞர்

Comments