அலெக்ஸாண்டரை தோற்கடித்த தமிழ் மன்னன்

அலெக்ஸாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தான் போரஸ் என்கிற புருஷோத்தமரை வென்றான். இப்படித்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் ஏதோ தன் பிள்ளையின் வீர சாகசத்தை விளக்குவதுபோல மார்தட்டிக்கொண்டு அலெக்ஸாண்டரின் அவைப்புலவரைப்போல நம்மிடம் பாடியபோதெல்லாம் நாமும் அலெக்ஸாண்டரை ஏதோ உலகை வென்ற ஒப்பற்ற ஒரே வீரனாக நினைத்து அவனை ஒரு ஹீராவாக்கி நம் சந்ததியின் மீதும் காலம்காலமாய் புகுத்திவருகிறோம்,,,,

ஆனால் அவன் இந்தியாவை நோக்கி ஏன் வந்தான், அவன் போரசை வென்றது உண்மையா? உண்மையெனில் ஏன் இந்தியாவின் பிற பகுதிகளையும் வெல்லாமல் பின்வாங்கினான்? என்ற உண்மைகளையெல்லாம் ஆராயாமல், அலெக்ஸாண்டரின் புகழை அவன் நாட்டவனால் திரித்து எழுதப்பட்டதை அப்படியே அடியொற்றி தின்றுவிட்டு நம்மீது கக்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதே யாராலும் மறுக்க முடியாது, ஆனால் நடந்ததோ வேறு.

#கிமு 326 ல் அவன் இந்தியா வருவதற்கு சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே நமது இந்தியாவில் தென்கோடியில் பிறந்து இந்தியாவையே ஒருகுடையின்கீழ் ஆட்சிசெய்த சங்ககாலத் தமிழ் மன்னன் இந்தியா முழுதும் வெற்றிகொண்டு இமயமலையில் தன் தமிழ்ப்புலிக் கொடியினை பறக்கவிட்டதோடு நில்லாமல், இந்திய தேசத்தைத்தாண்டி பல்லாயிரம் மயில்களுக்கு அப்பாலுள்ள பாரசீகம்,கிரேக்கம்,கடாரம்,சீனா,கம்போடியா,சிங்கப்பூர்,எகிப்து,ரோம்,இலங்கை என கண்களில் பட்ட தேசங்களையெல்லாம் கத்திமுனையில் சரணடையச்செய்து தமிழனின் வீரப்புகழை புலிக்கொடியை நிலைநாட்டி தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததன் விளைவு,,,,

அலெக்ஸாண்டரின் குருவான அரிஸ்டாட்டில் மூலம் இந்துஸ்தானத்தை வென்று அங்கே வீரப்புகழோடு ஆட்சிபுரியும் தென்கோடித் தமிழ்மரபான வீரத் தமிழ் மன்னர்களையும் அவர்தம் வம்சத்தையும் பூண்டோடு அழித்தால்மட்டுமே அவர்களால் நம் ஙம்சத்தின்மீது படிந்த கறை அகலாது என அலெக்ஸாண்டரின் சிறு வயதிலிருந்தே பழிவாங்கும் நஞ்சை விதைத்து வளர்த்ததன் பலன் அலெக்சாந்தர் அவரது தந்தை
இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப்  பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப்
பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினார். இவர் அனத்தோலியா, சிரியா , பினீசியா , காசா , எகிப்து ,பாக்ட்ரியா ,
மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல். இந்தியாவின் பஞ்சாபில் ஆட்சிபுரிந்த சோழப்பேரரசனின் வம்சத்தவனான போரசிடம் போரிட்டு தோற்றுப்போன அவனால் பஞ்சாப் ஐ தாண்டி அவரின் பரம விரோதியான சோழ மன்னனின் பேரரசை நெருங்க முடியாமல் பின்வாங்கி திரும்பிச்சென்றார். ஆனால் தன் பரம விரோத தமிழகத்தை சூறையாட முடியாவிட்டாலும் தன் குரு அரிஸ்டாட்டிலின் மற்றொரு பிரதான நோக்கமான இந்தியாவின் அழியாப்புகழ்பெற்ற தங்க வைர முத்து பவழ மாணிக்கங்கறைவிட மதிப்பில்லா அரிய பொக்கிஷங்களான கணிதவியல்,வானவியல்,புள்ளியல் மற்றும் இன்னபிற அரிய பெரிய பொக்கிஷங்களை எடுத்துச்சென்றதில் ஓரளவு வெற்றிபெற்ற திருப்தியோடு சென்றவன் தன் தாய்நாட்டைக்கூட அடையாமல் தான் சூறையாடிய நாட்டில் இருந்து சேர்க்கப்பட்ட மெசப்பட்டோமிய வீரர்களால் கொலை செய்யப்பட்டான் என்பது தனிக்கதை. இப்போது அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பிற்கு வருவோம்,,,
அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசையை ஒடுக்கியவன் தமிழன் மாமன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தமர் …
கி மு 320 ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலம்முதல் பல நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் சொத்துகளை தமது நாட்டுக்கு எடுத்து சென்று சுகமாக வாழுதல் என்னும் கொள்கை யில் குமரி கன்னடம் என்று சொல்லப்பட்ட இன்றைய இந்தியாவை பழிதீர்க்க கனவு கண்டார் பிலிப். . ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன் சுவீகரித்துக் கொண்டிருந்தான் . ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை என்பது போல மண் ஆசையும் பொன் ஆசையும் பெண் ஆசையையும் விட பழிவாங்கும் எண்ணம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை .
அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு வரைசெய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல் நதிகள் அடர்ந்த காடுகள் அந்த நாட்டின் காப்பரணாக இருப்பதைக் கண்டான். இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். எங்கே, எப்படிக் கடப்பது. இதுதான் அலெக்ஸாண்டரின் மிக பெரிய கேள்வி . அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். ஆம் அவைதான் இலகுவான வழி . இந்தியா நோக்கி படை எடுத்து வரும் வழியில் உள்ள பலநாடுகள் அலெக்ஸாண்டருடன் போரிட்டு மடிந்தன மீதம் உள்ள நாடுகள் பலவும் யுத்தமின்றி அலெக்ஸ்சண்டருக்கு வழி விட்டன.
இமைய மலைத் தொடரைக் கடக்கும் முயற்சியில் அவருடைய படைகள் ஈடுபட்டன. அவரிடம் இருந்த மாசிடோனிய வீரர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் மட்டுமே. அலெக்ஸ்சன்டரின் உளவாளிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து திரட்டிய தவல்கள் அலெக்ஸ்சண்டருக்கு பெரும் வியப்பாக இருந்தது. சோழர் படைகள் வலுவாக் இருந்தன . மாமன்னன் புருசோத்தமன் அலெக்ஸ்சாண்டர் படைகளை சந்திக்க தயாராக உள்ளார் என்ற செய்தியும் அலேச்சண்டரை மேலும் சீற்றம் கொள்ளவே செய்தது தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட .பெர்ஸிய நாட்டு மன்னனருடன் இளைஞர்களில் 30 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய படையில் அவர் சேர்த்துக் கொண்டார். தற்போது படை பலமுடையதாகிவிட்டது.
ஆனாலும் சோழர்கள் 2 லட்சம் காலால் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய யானை படை 3000 இருந்தது . சோழர்கள் தமது யானை படைகளை மிக இரகசியமாக வைத்து இருந்தார்கள் அதனை அலெக்ஸ்சாண்டர் முழுமையாக் அறிந்து இருக்கவில்லை . சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற கணிப்பே அலேச்சண்டரிடம் இருந்த்தது.
இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர். அப்போது அப்பகுதியில் இருந்து சோழர் படை தந்திரோபாய பின் வாங்களை செய்து சிந்து நதியின் தென் கிழக்காகா ஒரு இடத்தில் தமது படைகள் குவிந்து இருப்பது போல பாவனை செய்து இரவு வேளைகளில் மிக பலமான யானை அணிகளை வடக்காக் நகர்த்தி இருந்தார்கள் . அலெக்ஸ்சண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழ படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் காண்பிக்கப் பட்டது.
அலெக்ஸாண்டரின் படை, ஆற்றல் மிக்கது; முறையான பயற்சியே அவர்களுடைய ஆற்றலுக்குக் காரணம்.
மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் அலெக்ஸாண்டர் அழைத்தார்.
பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றி ஆசை காட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். பயிற்சி இல்லாமல் அவர்களை பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர். இதனால் அவருடைய படை முழுமையான போர்வீரர்கள் கொண்ட படையாகி விட்டது.
அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒரு பிரிவைத் தனது நன்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார். அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதிப் தென் பிராந்தியம் பிரதேசத்தை நோக்கிச் சென்றது. மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்கு பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உல் நுழைந்தது மலை சாதியினரை எதிர் கொண்டது.மலைச் சாதியினர் பலசாலிகள், முரட்டுத் தன மான தாக்குதல்களை செய்தார்கள் அவர்களுடன் புருசோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலிமையில் அங்குதான் சோழரின் குதிரைபடைகளும் நின்றன . மிகவும் பயற்சி பெற்ற மலைச்சாதி இளைஞசர்கள் தாய்மண் காக்க சோழன் படையில் இணைந்து இருந்தார்கள் . குளக்கோட்டன் படயின் ஒரு தபதியாக மாகதன் என்னும் தளபதி அலெக்ஸ்சன்டரின் படைகளை ஓரளவு உல் நுழையவிட்டு இடையில் குருகருத்து தாக்கினார். அத்தாக்குதலே முதல் முறையாக அலேச்சண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது .
இன்னும் ஒரு பகுதியில் “ஹஸ்தி’ என்கிற மலைச் சாதித் தலைவன் பெருவீரம் காட்டி அலெக்ஸாண்டரை எதிர்த்தான். அவன் புஷ்ப கலாவதி என்கிற தலைநகரைக் கொண்ட சிறுநில பகுதிக்கு மன்னன். மாசிடோனிய படை தொடர்ந்து இருபது நாட்கள் போர் செய்ய வேண்டியிருந்தது. கடுமையான போருக்குப் பிறகு மசொடோநியர்கள் பெரும் அழிவை சந்தித்து இருந்தார்கள் . இதுவராய் தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் புதுமையான உத்திகள் தமிழனின் வீரம் அலெக்ஸ்சண்டருக்கு வியப்பாக் இருந்தது.
இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சந்தர் மிக பயிற்றுரவித்த நாய்களை பயன் படுத்தினான் . அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராக இருந்தன .
இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலேச்சண்டரை கவர்ந்தது. இந்தியாவை வென்று இங்கேயே இர்னுந்து விட வேண்டும் என்று எண்ணினான் . இந்தியாவை வளமான நாடு என்பதையும், அது தமிழரின் வீரத்தின் விளைநிலம் என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்வி பட்டிருந்தான் . ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும்தான் தெரிந்து கொண்டார். தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அலெக்ஸ் சந்தர் சில மன்னர்களை இரகசியமாக சந்திக்க தனது ஒற்றர்களை அனுப்பி வைத்தான் . போராடி வெல்வதில் சிரமனகள் நிகழும் நிலை தோன்றியது . தென் கிழக்கு படையுடன் இணையும் நாள் தாமதம் ஆகியது. தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறினான் அலெக்ஸாண்டர். பாகிச்தனம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர் தலைமயில் இருக்கும் இந்திய படைகளை கொடுக்க தொடங்கியது .
அடுத்து, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்கும் இடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, “அம்பி’ என்கிற மன்னன் ஆண்டுவந்தார். அவன் மன்னன் புருசோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டு இருந்தான் . அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது புர்சொத்தனை அடிமைகொள்வான் . அலேச்சனடருக்கு உதவினால் தான் வரும் களத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம என்று கனவு கண்டான் . அவனது எல்லை தாண்டினால் புருசோத்தமன் படைகள் தயாராக இருந்தன . அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக் இருந்தன . அந்த யானை படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதி சோழன் தயாராக இருந்தார் .
அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் போரஸ் என்ற புருசோத்தமன் ஆட்சி செய்துவந்தார். சற்று தள்ளி ராவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர் களின் தேசம் இருந்தது. காமரூபம், வங்கம், மகதம் என்று வட இந்தியாவிலேயே பல ராஜ்யங்கள் சோழ மண்டல புலிக் கொடியின் குடைக்குள் ஆண்டு வந்தன .
.
இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டரை தங்கள் பொது எதிரியாக பாவித்து, வட இந்திய மன்னர்கள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், அலெக்ஸாண்டரின் கதை ஒரே நாளில் முடிந்து விட்டிருக்கும். ஆனால், அவர்களோ யார் வந்தால் என்ன? எது நடந்தால் என்ன? என்று அக்கறை யில்லாமல் இருந்துவிட்டனர். வந்த வேலை எளிதாக முடியும் என எண்ணி மகிழ்ந்தார் அலெக்ஸாண்டர்.
அன்று தமிழர் படையே மிகவும் உக்கிரமான போரை தொடுத்தது . தட்சசீல மன்னர் அம்பிக்கும், அரசர் புருசோத்தமர பிடிக்காது அவரது வீரமும், நிர்வாகத் திறமையும் அவர்மீது பொறாமையை ஏற்படுத்தியிருந்தன.
அலெக்ஸாண்டர் பெரும்படையுடன் அம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்து இருந்தார். கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், வந்திருப்பவர் பெரிய வீரனாகத்தான் இருக்க வேண்டும். பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார் என்று புரிந்துக் கொண்டார்.
அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, போரஸின் மீது நமக்குள்ள பகையை தீர்த்துக் கொள்ளக் கூடாது? என்று திட்டமிட்டார் அம்பி . தனது எல்லை நாட்டில் காலடி வைத்த அலெக்ஸாண்டரை அவர் இரு கை நீட்டி வரவேற்றார். அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார்.
“நான் உங்கள் நண்பன், உங்களை இந்நாட்டின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி!’ என்று கூறிக்கொண்டார்.
அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை அம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.
அலெக்ஸாண்டர் அம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். அம்பி தன் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரண் அடையச் செய்தார்.
அலெக்ஸாண்டர் அம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. ஆதாயம் கருதிய கூட்டு அது. அம்பி மூலம் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.
அலெக்ஸாண்டர் மூலம் போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடம் இருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது அம்பியின் எண்ணம்.
நம்முடைய படையெடுப்பு தட்சசீலத் தோடு நின்றுவிடலாம். இங்கே நாம் வெற்றி கொள்ள வேண்டிய மாநிலங்கள் இன்னும் பல இருக்கின்றன என்று எண்ணினார் அலெக்ஸாண்டர். எல்லாருமே அம்பி மாதிரி சரணடைந்து விட மாட்டார்கள். வீரத்துடன் எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்களும் இங்கே இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிந்தார்.
காட்டிக் கொடுத்த அம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டு எழுந்த புருசொத்தமர் தமிழரின் மனம் காத்த மறவர் தமிழர் வரலாற்றின் பெருமிதம்.அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டு இருந்தது ஆகும். புருசோத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. அம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். அத்துடன் புருசொத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்துவிட்டார்.
அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருசோத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்!’ என்று தூதன் மூலம் தெரிவித்தார்.
புருசோத்தமர், “அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார்!’ என்று தெரிவித்து விட்டார்.
அம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் அலெக்ஸாண்டர். சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.
போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர். அந்த அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளில் இருந்தும் படைகள் வந்து இணைந்தன.
போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர்.
ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.
அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை புருசொத்தமர் அறிந்து இருந்தார் . அவர்களது தாக்குதல் முறைகள் பற்றி ஏற்க்கனவே போர்காலங்களில் இருந்து தப்பிவந்த மன்னர் பலரும் புருசோத்தமரிடம் தஞ்சம் அடைந்து இருந்தார்கள் . புருசோத்தமர் மிக தந்திரமாக தனது படை பிரிவு ஒன்றை அம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த நா ட்டு விசுவாசிகளை திரட்டி வைத்து இருந்தார் சரியான நேரத்தில் அவர்கள் அம்பியின் அரண்மனை மீது தகுத்த நடத்தி அம்ம்பியை சிறைபிடிக்க தயாராக இருந்தார்கள் .
அலெக்ஸ்சாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று புருசோத்தமன் படைகளுக்கு பின்வலம்மாக நிலை எடுக்க பணித்தான் . ஆற்றை கடப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை புருசோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிக அவதானமாக காத்து வந்தார் . அங்காங்கே சில் குடியிருப்புகள் இருந்தன அவற்றை கடந்து படைகளை உள் நுழைவது கடினம் . ஆற்றை கடக்க இலகுவான இடமாக ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது. முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர் எல்லைக்குள் நுழைவது . மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயத்தங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது ஆனாலும் சோழர்கள் எந்த சவாலையும் சந்திக்க படைகளை எங்கும் பல தளபதிகள் தலைமையில் தயாராக வைத்து இருந்தார்கள் . எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழரின் ஒற்றர்கள் கண்களில் தப்பவில்லை .
யுத்தம் தொடங்கியது குதிர படைகள் காடுகளை மிக வேகமாக ஊடறுத்து அம்புகளாய் சென்றன, காடுகளை உடைத்தபடி யானைகள் பிளிறிக்க கொண்டு நலாபுறமும் இருந்து வந்தன அலெக்ஸாண்டரின் படை செய்வது அறியாது சிதறி ஓட அம்பியின் அரண்மனையும் சோழர் வசம் ஆனது . 3000 யானைகளின் சீற்றத்தில் அலெக்ஸாண்டரின் குதிரைபடைகள் பாதிக்கு மேல் அழிந்தன .  சோழன் படைத்தளபதி எறிந்த வேல் அலெக்ஸ்சன்டரின் பாதி உயிரை குடித்தது விசம் தடவிய வேல் பட்து அலெக்ஸ்சாண்டர் வீழ்ந்தான் ….
அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது . போர் நிருத்தபடுகின்றது . அலெக்ஸ்சன்டரின் தெற்கு நோக்கிய படைப்பிரிவின் தலைவன் அலெக்ஸான்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்படுகின்றான் அவனது வாளை புருசோத்தமன் அலேச்சண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான் . விஷம் அழமாக அலேச்சண்டரின் உடலில் பாய்ந்து இருந்தது. அவன் மிகவும் துன்பபடுகின்றான்…. நாடு பிடிக்கும் அவனது ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது…ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தமர்.
அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஒடுக்கியவன் நாம் மறந்த, வடநாட்டவனால் மறைக்கப்பட்ட தமிழன் மாமன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தமர்.

*ஒரு தமிழ் சோழ மன்னன் நம்மை ஆட்சி புரிந்தான் என்பதைவிட அவனிடம் அடிமைபட்டுக்கிடந்தோம் என்பதை ஒப்புக்கொள்வதைவிட எவனோ ஒரு வெளிநாட்டவனிடம் தோற்றுப்போனோம் என்பதை பரப்புவதை அவர்கள் மேற்கொண்டதே தமிழனின் மீதான வடநாட்டவர்களின்  இனவெனியை அறியமுடிகிறது,

இறுதியாக அலெக்ஸாண்டர் தோற்றோடினால் புரவிப்படையில் பறந்திருக்கலாமே ஏன் அமைதியாக கப்பல் கட்டி சென்றான் என்கிற கேள்வி எழலாம்.   "ஜீலம் போரில் அலெக்ஸாண்டரின் குதிரைப் படைகள் கடுமையாக அழிக்கப் பட்டன.தானும் போரிலே விசம் தடவிய வேள்பட்டு பலத்த காயமடைந்ததை கருத்தில்கொண்டு, போர் தொடர்ந்தால் தான் நிர்மூலமாக்கப்படுவோம் என்பதனை அலெக்ஸாண்டர் உணர்ந்து கொண்டான். எனவே போரஸ் மன்னனிடம் போரினை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டான். இந்திய பாரம்பரியத்திற்கே உரிய பெருந்தன்மையுடன் தன்னிடம் சரணாகதி என வந்த அலெக்ஸாண்டரை கொல்லவில்லை. இதற்கு பின்னர் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். புருஷோத்தமனுக்கு போர்களில் உதவியும் செய்தான்." எனவே அலெக்ஸாண்டர் போரில் புறமுதுகிடவில்லை மாறாக புருஷோத்தமனிடம் சரணடைந்தான். இரண்டாவதாக, மீண்டும் மலைப்பிரதேசம் வழியாக அவன் சென்றிருந்தால் ஆங்காங்கே மலைவாச அரசுகளின் இராணுவ தாக்குதல்களுக்கும் அவன் ஆளாகியிருப்பான். இந்த அரசுகள் மீது மின்னல்வேக தாக்குதல்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி வந்திருந்தான் அலெக்ஸாண்டர். எனவே அவன் திரும்ப அதே வழியில் சென்றால் நிச்சயம் அவனது படை தாக்குதல்களை சந்தித்திருக்கும். எனவே புருஷோத்தமனிடம் சரண ஒப்பந்தம் எழுதி இங்கு அவனுடைய பாதுகாப்பில் கப்பல்கள் மூலம் செல்வதே புத்திசாலித்தனமான முடிவு என்பதால் இது நிகழ்ந்தது.
நேரு தமது 'Discovery of India' நூலில் கூறுகிறார்: "கிமு நாலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு ஒரு இராணுவப் பார்வையில் மிகவும் சிறிய விஷயம்தான். அது எல்லைகளுக்கு அப்பால் நடத்தப்பட்ட ஒரு சூறையாட்டம் (raid) தானே ஒழிய படையெடுப்பல்ல. அதுவும் அவனுக்கு அத்தனை வெற்றிகரமான சூறையாட்டம் கூட இல்லை. ஒரு சாதாரண எல்லைப்புற தலைவனிடமே இத்தனை வன்மையான எதிர்ப்பு இருக்கும் என்றால் தெற்கே உள்ள இன்னமும் வலிமையான பேரரசுகளிடமிருந்து எத்தனை எதிர்ப்புகள் இருக்கும் எனும் எண்ணம் பாரதத்துக்குள் படையெடுக்கும் எண்ணத்தையே அலெக்ஸாண்டரை மறுபரிசீலனை செய்ய வைத்தது." (பக்.114) நேரு தமது வார்த்தைகளில் கவனமாக அலெக்ஸாண்டருக்கும்-எல்லைப்புற தலைவனுக்கும் இடையிலான போரில் வெற்றி-தோல்வி எனும் பதங்களை தவிர்க்கிறார் என்பதுடன் போர்களத்தில் அலெக்ஸாண்டர் சந்தித்த நிகழ்வுகளே அவனது பின்வாங்கலுக்கு காரணம் என்பதையும் கூறுகிறார்.
ஆக, வரலாற்றில் அலெக்ஸாண்டர் தனது முதல் தோல்வியை இந்தியாவில் சந்தித்தான் என்பதனை மறுப்பதைக்காட்டிலும் ஏற்றுக்கொள்ளவே அதிக காரணங்கள் இருக்கின்றன. மேலைநாட்டவருக்கு கசப்பாக இருக்கலாம். மேலைநாட்டார் வசப்பட்ட வரலாற்றாசிரியர்களுக்கு கசப்பாக இருக்கலாம். மேலைநாட்டு கலைக்களஞ்சியங்கள் இத்தகவலை இயன்றவரை புறந்தள்ள பார்க்கலாம். ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இந்த தகவல்களை நம் வருங்கால சந்ததியினரிடம் முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
இதுவே இத்தேசத்தை நேசிப்பதில் இணையும் மனம் கொண்ட தங்களிடம் நான் கேடகும் வரமாகும்.
என்றென்றும் பணிவன்புடன்      ராசா துரியன் வழக்கறிஞர்.


Comments