​18 மாத குழந்தையைக் பலாத்கார வன்புணர்வு செய்த தந்தையின் நண்பன்!

குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு விட்டுச்சென்ற தந்தையின் நண்பனே 18 மாத பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஷாஷட்பூர் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதியினருக்கு 18 மாத பெண் குழந்தை இருந்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இருவரும் தங்கள் குழந்தையை, தங்களுடைய நண்பனிடம் விட்டுவிட்டு வேலை சென்று உள்ளனர்.

வீட்டில் தனியா இருந்த நேரத்தில் குழந்தையை பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குழந்தையின் அம்மா, குழந்தை அழுதுகொண்டே இருப்பதையும், குழந்தையின் இன உறுப்புகளில் ரத்தம் கசிவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன்பிறகு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்தவன் 21 வயது இளைஞன். திருமணம் ஆகாதவன். அவன் மீது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கான கடுமையான தண்டனை வழங்கும் பாஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது

Comments