தெலுங்கானாவில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் உள்ள போலீஸ் அதிகாரி கட்வால் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஹாசன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், காவல்நிலையத்திலேயே பெண் காவலர் இவ்வாறு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதே போல, தெலுங்கானாவின் சரோநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு, ஆண் காவலர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment