சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்.பில், பி.எச்.டி. பட்டம் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் பெறப்பட்ட எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் செல்லும் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலில் யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் முழு அல்லது பகுதி நேர படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.
தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்த பட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment