பிரியாசிங்க்கும் அவரது கணவர் அமித்சிங்குக்கும் 3.5.2009 ஆம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன்பிறகு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனால் பிரியா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கணவரின் குடும்பத்தினர் தன்னிடம் நகை கேட்பதாகவும், தன்னுடைய காப்பீடு பாலிசியில் இருந்து ரூ 50,000/- எடுத்துக் கொண்டதாகவும், 2010 ஆம் ஆண்டு தான் கருவுற்ற சமயத்தில் அடித்து உதைத்தாகவும், மேலும் வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியதாகவும், தீ வைத்து கொலை செய்து விடுவதாகவும் கூறியிருந்தார். மேலும் 15.1.2012 ஆம் தேதி தன்னை வலுக்கட்டாயமாக பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை மறுத்து கணவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதன்பிறகு கணவர் தோன்றா தப்பினராக இருந்து கொண்டார்.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் பிரியாவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
அதனை எதிர்த்து பிரியா சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மேல்முறையீட்டில் ஆஜரான பிரியாவின் வழக்கறிஞர், கணவர் தோன்றா தப்பினராக இருந்து கொண்டார். அவர் நிரூபண பிரமாண வாக்குமூலமும் தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தில் சாட்சியமும் அளிக்கவில்லை. எனவே விசாரணை நீதிமன்றம் பிரியாவின் மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை பிரியா கூறியிருந்த போதிலும் அதுகுறித்து அவர் கணவர் மீது காவல்துறையில் எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் கணவர் பற்றி எதுவும் கூறவில்லை, மாவட்ட சமூகநல அதிகாரியிடமும் புகார் ஏதும் அளிக்கவில்லை.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் கீழ்கண்ட வழக்குகளில் "கொடுமைப்படுத்துதல்" என்ற குற்றச்சாட்டினை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
Dr. N. G. தஸ்தேன் Vs திருமதி. S. தஸ்தேன் (1975-2-SCC-326)
V.பகாட் Vs திருமதி D. பகாட் (1993-2-DMC-568)
சிராஜ் முகமத்கான் Vs ஹபிசுனிஸா யாசின் கான் (1981-4-SCC-250)"
சாவித்திரி பாண்டே Vs பிரேம் சந்திரா பாண்டே (2002-1-DMC-177)
கனாத் பட்நாயக் Vs ஒரிஸ்ஸா மாநிலம்
(2002-2-SCC-619)
பிரவின் மேத்தா Vs இந்தர்ஜித் மேத்தா
(2002-5-SCC-706)
சேட்டன்தாஸ் Vs கமலாதேவி
(2001-4-SCC-250)
A. ஜெயச்சந்திரா Vs அனில் கவுர்
(2005-2-SCC-22)
நவீன் கோகிலி Vs நீலுகோகிலி
(2006-1-DMC-489)
சுஜாதா உதய் பாட்டீல் Vs உதய் மதுக்கார் பாட்டீல் (2007--1-DMC-6)
மனிஷா தியாகி Vs தீபக் குமார்
(AIR-2010-SC-1042)
இராமசந்தர் Vs அனிதா (2015-2-SCC-539)
பிரியா தன்னை கணவர் கொடுமைப்படுத்துகிறார் என்று கூறியுள்ள போதிலும் அதனை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை. கணவர் தோன்றா தரப்பாக இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலு‌ம் கணவரிடமிருந்து இடைக்கால பணம் கேட்டும் பிரியா மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே பிரியாவின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சரிதான் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
F. A. No - 1970/2016
Dt - 29.6.2017
பிரியாசிங் Vs அமித்சிங்
2018-1-DMC-577பிரியாசிங்க்கும் அவரது கணவர் அமித்சிங்குக்கும் 3.5.2009 ஆம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன்பிறகு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

2018-1-DMC-577

Comments