இரயிலில் படியில் பயணம் செய்வோர்க்கு சாதகமாக கீழ்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது அதாகப்பட்டது என்னவென்றால்...!.

இறந்து போன ரஞ்சித் குமார் திருத்தணி விரைவு ரயிலில் முறையாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்தார். அவர் பகுஜன் சமாஜ்வாடி கட்சி நடத்திய ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டு ரயிலில் லக்னோ திரும்பிக் கொண்டிருந்தார் ரயில் டிரைவர் திடீரென சிக்னல் கிடைக்காமல் ரயிலை நிறுத்தியதால் படியில் நின்று பயணம் செய்த ரஞ்சித் குமார் கீழே விழுந்து இறந்து விட்டார்.
எனவே அவருடைய இறப்பிற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவருடைய வாரிசுகள் ரயில்வே நிர்வாக தீர்ப்பாயத்தில், ரயில்வே சட்டம் பிரிவு 124ன் கீழ் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரயில்வே நிர்வாகம் ரூ. 4,00,000/-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ரயில்வே நிர்வாகம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டில் பயணியின் கவனக்குறைவால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும், எனவே ரயில்வே சட்டம் 156ன் படி படிக்கட்டுகள் பயணம், மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தல், ரயில் இன்ஜின் மீது அமர்ந்து பயணம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ரஞ்சித் குமாரின் கவனக்குறைவால் தான் அவர் இறக்க நேரிட்டது, எனவே ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என ரயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்நீதிமன்றத்தில் "திருமதி. அக்தாரி Vs இந்திய அரசு" என்ற வழக்கில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பெட்டிகளில் பயணம் செய்வதற்கு எந்த வகையான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயணச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. அந்த பெட்டிகளில் மெட்ரோ ரயிலில் இருப்பது போல் ரயில் நடைமேடையை விட்டு நகரும் பொழுது தானாகவே கதவை சாத்திக் கொள்ளும் வசதிகள் இருப்பதில்லை. எந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக முன்வசதி இல்லாத ரயில் பெட்டியில் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 ஒரு இந்திய குடிமகனுக்கு உயிர் வாழ்கிற உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது. ரயில்வே நிர்வாகம் ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கிய உடனே அவருடைய உயிருக்கு ரயில் பயணத்தில் பாதுகாப்பு அளிக்கும் கடமை வந்து விடுகிறது. ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்ட உடன் ரயில் பெட்டிகளின் கதவுகள் தானாகவே மூடிக் கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.
எனவே ரயில் படிக்கட்டில் பயணம் செய்து விழுந்து இறந்தால் ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்திய அரசு Vs ஜோகேஸ்வர் பிரசாத்
(AIR-2012-ALL-12)

Comments