* திருமணமாகி இருந்தால் அவரது விதவை மனைவிக்கு மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கும், மீதியுள்ள இரண்டு பங்கை பிள்ளைகள் பெற முடியும் (சட்டப்பிரிவு 33 (ஏ)வில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது).
* இறந்தவருக்கு மனைவி மட்டும் இருந்து பிள்ளைகள் இல்லாத பட்சத்தில், தனது மொத்த சொத்தில் பாதி பங்கு விதவை மனைவிக்கும், மீதி ரத்த சம்மந்தமான உறவினர்கள் பெற தகுதியுடையவர்கள் (சட்ட பிரிவு 33 (பி)ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது).
* இறந்தவருக்கு பிள்ளைகள் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் யாருமில்லாத பட்சத்தில் முழு சொத்தின் உரிமையும் விதவை மனைவிக்கு சேரும். (சட்டப்பிரிவு 33 (சி)ல் உறுதி செய்யப்பட்டுள்ளது).
* இறந்தவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் யாருமில்லாத பட்சத்தில் முழு சொத்தும் அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் அனுபவிக்கலாம். (சட்டப்பிரிவு 34ல் உறுதி செய்கிறது).
* இறந்தவருக்கு மனைவி, பிள்ளைகள், ரத்த சம்மந்தமான உறவினர்கள் என்று யாருமில்லை என்றால், அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்தும் அரசாங்க சொத்தாக மாறிவிடும். கிறிஸ்துவ பெண் இறந்தால், அவர் பெயரில் உள்ள சொத்து கணவருக்கு எவ்வளவு பங்கு?
* மரணமடையும் கிறிஸ்துவ ஆணின் சொத்தில் எந்தளவு அவரின் விதவை மனைவிக்கு பங்கு கிடைக்கிறதோ அதே அளவு கிறிஸ்வ பெண் இறந்தால், அவர் பெயரில் உள்ள சொத்து அவரது கணவருக்கு கிடைக்கும்
Comments
Post a Comment