1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்,
( Essential Services Maintenance Act – esma)
.
போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது.
.
அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன.
,
மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.
.
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது.
.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு.
.
அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
.
2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தினார் .
.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் ,
Comments
Post a Comment