ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.
அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
#வாகன_ஓட்டுநர்_உரிமம்_பெற #கல்வித்_தகுதி_உண்டா?
போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.
#ஓட்டுநர்_உரிமம்_பெறும்_முறை #என்ன?
ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டணம் செலுத்தவேண்டும்.
Comments
Post a Comment