ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதன் விளைவாக குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகையை எதிரி வழங்க வேண்டுமா?
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதன் விளைவாக குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகையை எதிரி வழங்க வேண்டுமா?
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒருவர் வாக்குறுதி அளித்து, அவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதன் விளைவாக குழந்தை பிறந்துள்ள நிலையிலும், FIR பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், அந்த நபரை அந்த பெண்ணின் கணவராக தான் கருத வேண்டும்.
உச்சநீதிமன்றம் "பட்ஷா Vs உர்மிளா பட்ஷா கோட்சே மற்றுமொருவர் (2014-1-SCC-188)" என்ற வழக்கின் தீர்ப்பு பத்தி 18 ல், நீதிமன்றம் சட்டத்திற்கு விளக்கம் அளிக்கக்கூடிய நபராக உள்ள நிலையில், விடுபட்டு போனவைகள், நிச்சயமில்லாதவற்றை சரி செய்தல், சுதந்திரமான முடிவுகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் நல்ல முடிவுகளை வழங்குதல், அறிவியல் ரீதியான ஆராய்ச்சி - சில சூழ்நிலைகளில் ஒரு பெண் மனைவியாக மாறக்கூடிய நிலைகளில், அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்கிற ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக ஒரு நல்ல நோக்கத்தில் கு. வி. மு. ச பிரிவு 125 யை சட்டம் இயற்றியவர்கள் உருவாக்கியுள்ளார்கள் பாலின அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டிய வழக்குகளை தீர்மானிப்பதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதாகும். நாங்கள் ஏற்கனவே ஷாபானு வழக்கிலிருந்து சபானா பானோ வழக்கு வரை பல உதாரணங்களை காட்டி, முகம்மதிய பெண்ணிற்கும் ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளோம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதன் விளைவாக குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் அந்த நபர் கட்டாயம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், அந்த பெண் ஏமாற்றிய அந்த நபரின் மனைவியாக தான் கருதப்படுவார் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 4542/2016, DT - 16.3.2016
உதய சங்கர் Vs உமா மகேஸ்வரி மற்றும் இளவர் ரேணுகா
(2016-1-TLNJ-CRL-342)
Comments
Post a Comment