வெளி மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குற்றத்தில் எதிரியாக உள்ள தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாமா?
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு " S. P. சாந்திஸ்வரூப் Vs தமிழ்நாடு அரசு (1992-LW-CRL-475)
"
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு " S. P. சாந்திஸ்வரூப் Vs தமிழ்நாடு அரசு (1992-LW-CRL-475)"
என்ற வழக்கில், ஒரு நபர் தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே பிணையில் விட முடியாத (Non Bailable Offence) குற்றத்தை புரிந்திருந்து தமிழக எல்லைக்குள் கைது செய்து விடுவார்கள் என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தால் அவர் வசிக்கும் இடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆள்வரைக்குள் வராவிட்டாலும், அந்த நபருக்கு குறிப்பிட்ட கால அளவிற்கு (Limitation Period) முன்ஜாமீன் வழங்கி அந்த நபரை எந்த நீதிமன்றத்தின் ஆள்வரைக்குள் அந்த வழக்கு வருகிறதோ அந்த நீதிமன்றத்திலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முன்ஜாமீன் வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே வெளி மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குற்றத்தில் எதிரியாக உள்ள தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 4576/2013
சர்வாதிகாரி Vs ஆய்வாளர், இருஞ்சலக்குடா நகர காவல் நிலையம் மற்றும் ஆய்வாளர், உடுமலைப்பேட்டை காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம்
2013-2-MWN-CRL-109
Comments
Post a Comment