இந்தியாவின் முதன்மை சட்டங்கள்

இந்தியாவின் முதன்மை சட்டங்கள்

பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது.

பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள்

பிரிவு 6:1, அகில உலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாடு, 1966: உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த உணர்விலிருந்து வருகிறது. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். எவருக்கும் இது தன்னிச்சையாக மறுக்கப்படக்கூடாது.

பிரிவு 4:1, அமெரிக்க மனித உரிமை உடன்பாடு, 1969: ஒவ்வொருவரும் தங்கள் உரிமை மதிக்கப்பட உரிமை பெற்றவர்கள். இவ்வுரிமை பொதுவாக கருக்கொண்ட நாள் முதலாக பாதுகாக்கப்பட வேண்டும்.

பிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950:இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கம் எந்த சமயத்தையும் தழுவும், தழுவியபடி வாழும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரிவு-4: ஐ.நா வின் மனித உரிமைப்பிரகடணம் 1958: யாரையும் அடிமையாகவோ அல்லது அடிமைத்தனத்திலோ வைத்திருத்தல் கூடாது. அடிமைத்தனமும் அடிமைகள் வியாபாரமும் எல்லா விதங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்.

பிரிவு-22: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950: கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்த நபரும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருத்தல் கூடாது. அவர் தனது வழக்கறிஞரை சந்தித்து அவரது ஆலோசனை மற்றும் சட்ட உதவி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுதல் கூடாது.

பிரிவு-14: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950: இந்திய எல்லைக்குள் எந்த நபருக்கும் சட்டம் தரும் சமத்துவமோ அல்லது சட்டத்திற்குட்பட்ட சம அளவிலான பாதுகாப்போ மறுக்கப்படக்கூடாது.

பிரிவு-39(ஈ): இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950:ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் உண்டு. இது அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை நெறி.

பிரிவு-15: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950: 1. இந்திய அரசின் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களில் வேலைக்கான சம வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். 2. சமயம், இனம், ஜாதி, பால், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் என்னும் அடிப்படையில் வேலைவாய்ப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படக்கூடாது. 3. சமூக ரீதியாக பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் என்று அரசு கருதும் பட்சத்தில் வேலை வாய்ப்பில் இவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அரசு உருக்குவாக்குவதற்கு அரசுக்கு உரிமை உண்டு.

பிரிவு-7: ஐ.நா வின் மனித உரிமைப்பிரகடனம் 1948: சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் வழங்கும் பாதுகாப்பை பெறுவதில் எல்லோருக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சம உரிமை உண்டு. வேற்றுமை பாராட்டுவதை தூண்டுவதற்கு எதிரான பாதுகாப்பை பெற எல்லோருக்கும் சம உரிமை உண்டு.

பிரிவு-03: அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் மக்கள் சாசனம் 1981: ஒவ்வொரு தனி மனிதரும் சட்டத்தின் முன் சமம். ஒவ்வொரு தனி மனிதரும் சட்டத்தின் முன் பாதுகாப்பு பெற தகுதி உடையவர்கள்.

பிரிவு 7:1 : ஆசிய மனித உரிமைகள் சாசனம் 1998: ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையை பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தபடுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி மற்றும் அறிவு பெறவும், உணவு சுத்தமான குடிநீர், மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் நமக்கு உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப்பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லாத் தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு.

பிரிவு - 39 அ: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950: ஏழ்மை அல்லது பிற வசதியின்மை காரணமாக இன்னாட்டுக் குடிமகன் ஒருவன் நீதிமன்றங்களை நாடுகின்ற வாய்ப்பு மறுக்கப்படுமாயின், அரசே இலவச சட்ட உதவிக்கான வழிவகை செய்ய வேண்டும்.

பிரிவு-7, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988: பொது ஊழியரோ, பொது ஊழியராக நியமிக்கப்பட உள்ளவரோ, அலுவலக வேலை ஒன்றை செய்வதற்காக அல்லது செய்யாமல் விடுவதற்காக, சட்ட ரீதியான ஊதியம் தவிர லஞ்சம் பெறுவது ஆறு மாதம் முதல் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

பிரிவு-18: மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1988: பொது ஊழியரால் மனித உரிமைகள் மீறப்பட்டது அல்லது தடுக்கத் தவறியது தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை தொடங்கும்படி ஆணையம் சம்பந்தப்பட்ட அரசுக்கு அல்லது அதிகார அமைப்புக்கு பரிந்துரை செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரது குடும்பத்திற்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க பரிந்துரைக்கலாம்.

பிரிவு-51 : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950: இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும்கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.

பிரிவு 29:1 : இந்திய அரசியல் சாசனம் பகுதி 3, அடிப்படை உரிமைகள், 1950: இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் அவர்களின் மொழி, பண்பாடு, போன்றவை சிதையாமல் பாதுகாத்து வாழ உரிமை உள்ளவர்கள்.

பிரிவு 40, வழிகாட்டும் நெறிமுறைகள், இந்திய அரசியல் சாசனம், 1950: கிராமத்து பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து, அவை தனியே இயங்கும் அளவிற்கு அதிகாரம் படைத்த அமைப்புகளாக உருவாக்க முயற்சிகளை எடுக்க வேண்டியது மாநிலங்களின் கடமையாகும்.

பிரிவு 5:2 : ஆசிய மனித உரிமைகள் சாசனம் - 1998 வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பணியை முதன்மையாகக் கொண்ட அரசுகள் மனிதநேயம் கொண்டவையாகவும், திறந்த மனதுடனும், பொறுப்புடனும், செயல்பட வேண்டும்.

Comments