கடனுக்கு ஈடாக ஓய்வூதிய பிடித்தம் எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,:கடனை முறையாகச் செலுத்தத் தவறியதால் ஈடாக, ஓய்வூதிய கணக்கிலிருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்ததை எதிர்த்து தாக்கலான மனுவை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் பூக்கொல்லையைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் விவசாயக் கடன் ௭௫ ஆயிரம் ரூபாய் வாங்கினார். கடனை முறையாக செலுத்தத் தவறியதால், ஈடாக நடராஜனின் ஓய்வூதிய கணக்கிலிருந்து, வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்தது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடராஜன் மனு செய்தார்.
நீதிபதி எம்.வேணுகோபால் உத்தரவு மனுதாரர் உறுதியளித்தபடி, கடன் தவணையை செலுத்தவில்லை. இதனால், மனுதாரரின் ஓய்வூதிய கணக்கிலிருந்து, கடன் தொகைக்கு வங்கி ஈடு செய்துள்ளது. வாராக் கடன் நிலுவையை குறைக்க, இதுபோன்ற நடைமுறையை வங்கி கையாண்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறேன், என்றார்.
Source: .dinamalar ஜூன் 18, 2016

------------------------------------------------------------------
வங்கி கடனை திரும்ப செலுத்தாதவர் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்: அதிரடி தீர்ப்பு!
********************************************************
வங்கியில் வாங்கிய கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைப் பார்த்து ஓய்வு பெற்ற ஊழியரும், அவரின் மகனும் சேர்ந்து 75,000 ரூபாயை விவசாய கடனாக, பொதுத்துறை வங்கி ஒன்றில் வாங்கியுள்ளார். அந்த கடனை 2 ஆண்டுகள் சலுகை காலம் முடிந்து, 2015, ஏப்ரல் மாதத்திலிருந்து 10 தவணைகளாகத் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், கடனை வாங்கிய மின்வாரிய ஊழியரும், அவரின் மகனும் செலுத்தவில்லை. இதற்கிடையே மின் வாரிய ஊழியரின் பென்சன் தொகை வங்கியில் கிரெடிட் ஆனதும் வங்கி அதை கடனுக்கு ஈடாக எடுத்துக் கொண்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ''வங்கியின் பல நினைவூட்டலுக்கு பிறகும் கடனை செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் தொகையை எடுக்கலாம்'' என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி பிடித்த கடன் தொகையை திரும்ப பெறலாம் எனவும், அவ்வாறு வாங்கும் பட்சத்தில், மனுதாரர் வாங்கிய கடனை அவரும், அவரின் மகனும் திரும்ப செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
Source: vikatan. 18/06/2016)

Madurai, Jun 18 () If a debtor failed to settle the loan dues despite reminders from the bank, then the money could be recovered from his savings bank account, ruled the Madras High Court bench here today.
Justice M Venugopal dismissed a writ petition filed by a retired Tamil Nadu Electricity Board employee, who sought to restrain a nationalised bank from recovering the farm loan dues from his pension amount in the savings bank account.
The court observed that the bank was right in recovering the due amount from his savings bank account as per the mandate given by him at the time of availing the loan.
The petitioner and his son had jointly availed Rs 75,000 as farm loan from the bank in October, 2012, agreeing to repay it in 10 monthly instalments from April, 2015, after the holiday period of two years.
The judge said since they failed to repay the loan despite several reminders and only after it became a Non-Performing Asset, the bank was constrained to explore the possibility of recovering the amount as per loan agreement.
It was the duty of the petitioner and his son to repay the loan instalments and they could not wriggle out of the situation, the judge said. SSN RC RT MAV

source : timesofindia. Jun 18, 2016,
--------------------------------------------------------------------------------------
ஒருவர் பெற்ற வங்கிக் கடனை வசூலிப்பதற்காக சம்மந்தப்பட்டவரின் ஓய்வூதிய கணக்கில் கை வைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Comments