சர்பாசி ஆக்ட் - இது வங்கிகள் கொடுத்த கடனை நீதிமன்றங்களை நாடாமல் அவ் வங்கிகளே வசூல் செய்து கொள்ள அதிகாரம் தருகிறது. பிரச்சனை எழுந்தால் 'வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தின்' உதவியையும் நடலாம்.
SARFASI ACT - இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act அதாவது 'நீதிச் சொத்தை பத்திரப்படுத்தலும் மறு கட்டமைத்தலும் மற்றும் பிணைய நலனை வலியுறுத்தி செயல்படுத்தல்'. அப்பாடா... ரொம்ப பெரிய சட்டம்தான். இல்லியா பின்னே.? வங்கி கொடுத்த கடனை வசூலிக்க இந்த சட்டம் இயற்றப்பட்ட 2002-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கு கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் (கோர்ட் பீஸ்) கட்டி, பிணயமாக (ஜாமீனாக) கொடுக்கப்பட்ட சொத்தை பற்றுகை (ஜப்தி) செய்ய ஆயிரத்தெட்டு சட்ட நடைமுறைகளை பின்பற்றி வங்கி வழக்கை நடத்தி தீர்ப்பு வாங்க வேண்டும்.
இப்போ இந்த சர்பாசி சட்டம் வந்ததற்கு பிறகு இந்த சுற்றி வளைக்கும் நடைமுறை எல்லாம் சுருங்கி போச்சு. இந்த சட்டம் வங்கி கொடுத்த கடனை அதுவாகவே வசூல் செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ் 'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debt Recovery Tribunal) ஒன்றும் 'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debt Recovery Appellate Tribunal) ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது . இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை அதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலை வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்கள் கண்டபடி எதிர்வாதம் (டிபென்ஸ்) எடுக்கவும் முடியாது. அந்த வகையில் பின்வரும் முக்கிய வழக்கு சுட்டிக்கட்டத்தக்கது.
Comments
Post a Comment