புற்று நோய்க்குக் காரணமாகும் கெளுத்தி மீன்கள் கடத்தல்....

கர்நாடகாவுக்கு கடத்தப்பட இருந்த தடை செய்யப்பட்ட கெழுத்தி மீன்கள் பறிமுதல்


Nov 29, 2019

ஓசூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

புற்று நோய், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்ததையடுத்து, மத்திய மாநில அரசுகள் இந்த மீன்களை வளர்க்கவோ, விற்பனை செய்யவோ தடை விதித்துள்ளன. ஆனால் இந்த மீன்கள் 10 கிலோ எடைவரை வளர்வதால் வட மாநிலங்களில் சட்டவிரோதமாக இந்த வகை மீன்களின் குஞ்சுகளை வாங்கி வந்து ஓசூர் பகுதியில் சில பண்ணைகளில் வளர்த்து வருகிறார்கள்.

இதற்கு உணவாக, இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை பயன்படுத்துவதால் அந்த பகுதியே துர் நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஓசூர் அருகே பத்தளப்பள்ளியில் கர்நாடகாவுக்கு கடத்தப்பட இருந்த ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து குழித்தோண்டி கொட்டி அழித்தனர்.

Comments