தல அஜித் ஓட பொண்ணா இது....?

ஹீரோயின் போல் மாறியுள்ள விஸ்வாசம் பட அஜித் மகள் அனிகா! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.
#Viswasam #Thala #Ajith Daughter #AnikhaSurendran Glam Look 

#KollywoodCinima 

இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் - நயன்தாரா நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது விஸ்வாசம் திரைப்படம்.
 தந்தை, மகள் இடையேயான பாசத்தை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக கேரளாவை சேர்ந்த சிறுமி அனிகா சுரேந்தர் நடித்திருந்தார். 
14 வயதாகும் அனிக்கா  சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
 மலையாளம், தமிழ் என இதுவரை 16 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அனிக்கா
இந்நிலையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவரும் இவர் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
14 வயதிலும் ஹீரோயின் அளவிற்கு பயங்கர மாடர்னாக, ஸ்டெயிலாக போஸ் கொடுத்துள்ளார் அனிகா.

Comments