”உதவுவது போல நடித்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்றோம்” நாட்டையே உலுக்கிய பெண் கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதானவர் பகீர் வாக்குமூலம்#PriyankaReddy
கால்நடை பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதான ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா அன்று மாலை கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.
இரவு 9 மணி வரை பிரியங்கா வீடு விரும்பவில்லை. சற்று நேரத்தில் தன்னுடைய தங்கை பவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, மொபட் கீழே விழுந்து ரிப்பேர் ஆகிவிட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி டிரைவர்களை தவிர யாரையும் காணவில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை சரியாக இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. சற்று நேரத்தில் மீண்டும் பேசுகிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்தார். அதன்பின் பிரியங்கா வீடு திரும்பவில்லை.
பிரியங்கா வீடு திரும்பாதது பற்றியும், தொலைபேசியில் அவர் கூறிய விஷயங்களையும் அவருடைய குடும்பத்தார் மாதாப்பூர் காவல் நிலையத்தில் கூறி புகார் அளித்தனர்.
வேலை விஷயமாக வெளியில் சென்று வீடு திரும்பாத டாக்டர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை ரங்காரெட்டியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடக்கிறது என்று சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தாரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். பிரியங்கா குடும்பத்தார் அது பிரியங்கா என்று உறுதி செய்தனர்.
எனவே பிரியங்காவை யாரோ உயிருடனோ அல்லது கொலை செய்து எரித்து விட்டதாக வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் லாரி டிரைவர் கிளீனர் ஆகியோர் உட்பட நான்கு பேர் பிரியங்கா ரெட்டியை தூக்கி சென்று மறைவான இடத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் முதல் குற்றவாளியான மாநிலம் நாராயண பேட்டையை சேர்ந்த முகமத் பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாங்கள் நான்கு பேர் சேர்ந்து டாக்டர் பிரியங்கா ரெட்டிக்கு உதவுவது போல் நடித்தோம். பின்னர் அவரை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கழுத்தில் போட்டு இறுக்கி மூச்சு முடியாமல் செய்து கொலை செய்தோம்.
இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பிரியங்கா ரெட்டி உடலை லாரியில் போட்டு மேம்பாலம் வரை எடுத்துச் சென்று கீழே இறக்கி மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டோம் என்று கூறினார்.
டிரைவர் முகமது பாஷா அளித்த தகவல்கள் அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Comments
Post a Comment