சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,30,559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த புள்ளி விவரங்கள் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டை விட 2019ல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இரண்டு ஆண்டுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மட்டும் சென்னை காவல் துறையினரால் அபராதமாக 29 கோடியே 80 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment