குஜராத் மாநிலத்தில் கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளையின் உறவினர்கள் 90 லட்சம் ரூபாய்க்கு பண மழை பொழியச் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த திருமணம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் ஒருவரின் மகன் திருமணம் நடந்த நிலையில், மாப்பிள்ளையை வரவேற்க அவரது நண்பர்கள் சுமார் 90 லட்சம் ரூபாய் பணத்தை மழையாக பொழியச்செய்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மாப்பிள்ளை காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து, காரை சுற்றி இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வானத்தை நோக்கி வீசி, மாப்பிள்ளையை வரவேற்றுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி மற்றும் வியப்பை ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், 90 லட்சம் ரூபாயை வானத்தில் பறக்கவிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment