பெண்களுக்கு வரும் மாதவிடாய், மாதந்தோறும் வரும் உடல் இயங்கியல் மாற்றம். இதை எவ்வகையிலும் தவிர்க்க முடியாது.
நமது உடலின் கழிவுகள் எப்படி வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கான பிரீயட்ஸ்.
பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும் அதைப் பாதுகாக்க உருவாகும் இரத்த திட்டுகளும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழி வெளியேறுவதுதான் மாதவிலக்கு.
மாதவிலக்கின் போது பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு ஒரு சேர ஏற்படும். இதனால் தன் குடும்ப உறுப்பினர்களிடம் வழக்கத்தை விட கூடுதலாக கோபமும் எரிச்சலையும் வெளிப்படுத்துவார்கள்.
மனதளவிலும் உடலளவிலும் பலவீனமாக இருக்கும் உங்களின் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் உதவியாக இருப்பது மிகவும் அவசியம்.
பெண்களின் வலி அறிந்து நடந்து கொள்ளும் நாட்களில்தான் காதலும் அன்பு அதிகரிக்கும். பெண்களின் பிரீயட்ஸ் நேரத்தில் என்ன செய்தால் விரும்புவார்கள் தெரியுமா?
வேலைப்பளுவை குறையுங்கள் :
பிரீயட்ஸ் நேரத்தில் அன்றாட வீட்டு வேலைகளினால் கூடுதலாக உடல் சோர்வடையும் அதனால் வீட்டின் வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரீயட்ஸ் நாட்களில் உடல் ஓய்வு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்காதீர்கள்.
மாறும் உணவு முறை :
பிரீயட்ஸ் நேரத்தில் ஏற்படும் வலியினால் பெண்களின் உணவு முறையும், சுவையும் மாறும் என்பதால் அவர்கள் விரும்பும் உணவையே சாப்பிடக் கொடுங்கள்.
சிலருக்கு காரமான உணவை விரும்புவார்கள், சிலர் இனிப்பான உணவுகளை மட்டுமே விரும்புவார்கள்.
மசாஜ்:
வயிற்று வலி இருப்பதால் முதுகுக்கும் மசாஜ் செய்து விடுங்கள். வெதுவெதுப்பான நீரைக்கொண்டு டவல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். சிலருக்கு கால் வலி இருக்கலாம். சிறிது நேரம் மென்மையாக காலைப் பிடித்துவிடுங்கள்.
வலியில் இருக்கும்போது பெண்கள் பலருக்கும் செக்ஸ் குறித்த உணர்வு இருப்பதில்லை.
அதனால், இந்த நாட்களில் அதை செக்ஸ் குறித்த உங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். பீரியட்ஸ் நேரத்தில் உங்கள் பார்ட்னரிடம் உற்சாகமாக பேசி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.
Comments
Post a Comment