பாலியல் குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக்கொல்ல வேண்டும்! ஜெயாபச்சன் ஆவேசம்#JayaBachchan | #priyanakareddy

பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுவபர்களை பொது இடத்தில் விசாரணையின்றி அடித்துக் கொல்ல வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியின் எம்.பி ஜெயாபச்சன் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எம்.பிக்கள் பேசினர். அந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, ‘இந்தச் சம்பவம் மனித குலத்துக்கு அவமானம்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய குலாம் நபி ஆசாத், ‘இந்த பிரச்னையை வேரிலிருந்து சமூகம் கையாளவேண்டும். குற்றவாளிகள் எந்தப் பாகுபாடும் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்’என்று தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் எம்.பி ஜெயா பச்சன், ‘ஹைதராபாத் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்தப் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவேண்டும். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணையின்றி அடித்துக் கொல்லப்படவேண்டும்’ என்று ஆவேசமாகப் பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Comments