சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா என அறிஞர் அதிர்ச்சித் தகவல் #Coronavirus | #Covid19

சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா என அறிஞர் அதிர்ச்சித் தகவல் #Coronavirus | #Covid19 

சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக பிரான்சின் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் ( Luc Montagnier) தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் ஏய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் தெரிவித்துள்ளார்.

ஏய்ட்ஸ் என்ற நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வூகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ள அமெரிக்காவும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

Comments

  1. Air Jordan 5'4" Black | Air Jordan 5'4" Black | Air Jordan 5'4" | Air Jordan 5'4"
    This review good jordan 18 white royal blue is done from the inside air jordan 18 retro varsity red sports look at 먹튀검증 업체 샤오미 the air jordan 18 retro racer blue free shipping new air Jordan 5'4 and Air Jordan 5'4 Black. show to get air jordan 18 retro It's a standard size, two piece black leather travel case with two

    ReplyDelete

Post a Comment