3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. ராம்தேவின் பதஞ்சலி அறிவிப்பு!


3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. ராம்தேவின் பதஞ்சலி அறிவிப்பு!


டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா தொற்று காணாமலே போய்விடும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளை மிகவும் மோசமான அளவுக்கு பாதித்திருகிறது கொரோனா. உலக நாடுகளால் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன.
மருத்துவ அறிவியல் உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு இதுதான் மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எதுவும் கூறவில்லை.
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ்

மருந்து கண்டுபிடித்துவிட்டோம்- ராம்தேவ்
ஆனால் கொரோனாவை தங்களது மருந்துகள் மூலம் 100% குணப்படுத்திவிடலாம்.. அதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்திருக்கிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது: நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி.

பெருமையாக சொல்கிறோம்
டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறோம். அனைவருக்குமே 100% குணமடைந்துவிட்டது. உலக நாடுகள் இன்னமும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது பதஞ்சலி நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம்.



100% குணமடைந்துவிட்டது
என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். 3 நாட்கள்தான்... 69% நோயாளிகள் குணமாகினர்.. மொத்தம் 7 நாட்கள்தான்... 100% நோயாளிகளுமே குணமடைந்துவிட்டனர்.
 
மருந்து விலை ரூ545
இந்த கொரோனில் என்பது மாத்திரைகளாக இருக்கும். இது கொரோனா எதிர்ப்பு மருந்துகளாகும். பேராசிரியர் பல்பீர் சிங் தோமர், ஆச்சார்யா ஆகியோரது முயற்சியால் இந்த கொரோனில் உருவாக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் கொரோனா மருந்து விலை ரூ545. இதனை 30 நாட்கள் பயன்படுத்தலாம். பதஞ்சலி ஸ்டோர்களில் மட்டுமே இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த மருந்தை பரிசோதிக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்தோம். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

Comments