’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக் '

  ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக் '

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.

இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக், ஹெலோ, ஷேர் இட், கேம் ஸ்கேனர் என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் தினசரி பயன்படுத்தும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடை குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன. அதாவது, புதிதாக டவுன்லோடு செய்ய முடியாது என்றால் பழைய யூசர்கள் தொடர்ந்து மேற்கண்ட செயலிகளை பயன்படுத்தலாமா? போன்ற கேள்விகள் எழுந்தன.

தடை தொடர்பாக சீனாவைச் சேர்ந்த பைடன்ஸ் நிறுவனம் (டிக்டாக் & ஹலோ செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனம்) கூறுகையில், மத்திய அரசின் தடை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே. பழைய யூசர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசின் தடை தற்போதைய வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்தும் மேற்கண்ட செயலிகள் நீக்கப்படும். மேலும், இந்த 59 செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் (ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள்) தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த வகையிலும் மேற்கண்ட செயலிகளை பயன்படுத்த முடியாது.🙏

Comments