12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு அமேசானில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு அமேசானில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?
இ-காமர்ஸ் இயங்குதளமான அமேசான், இந்தியாவில் தனது வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஹைதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், இந்தூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 இந்திய நகரங்களில் இந்த வேலைகள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பணிக்கு ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என அறிவித்துள்ளது.மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு அல்லது கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு மாதத்திற்கு ரூ 15,000 முதல் ரூ .20,000 வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் அமேசான் கூறியுள்ளது. இந்த வேலைக்காலம் 6 மாதம் மட்டுமே.

பணியின் விவரம்: சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசிகள், மெயில்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதாகும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 1800-208-9900 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது seasonalhiringindia@amazon.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் தற்காலிக பணிகள் அவரவர் செயல்பாடுகளை பொறுத்து நிரந்தர பணியாக மாற்றம் செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.🙏

Comments