தாய்ப்பாலூட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!

தாய்ப்பாலூட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!🙏

முதல் முறை கருத்தரித்திருக்கும் பெண்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். இப்போதிலிருந்தே கரு வளர்ச்சி, பிரசவம் மற்றும் குழந்தை வளர்ச்சி போன்றவற்றை பற்றி எல்லாம் கேட்கவும், படிக்கவும் துவங்கி இருப்பார்கள். குழந்தை பிறந்து அவர்கள் கையில் இருக்கும் போது, உலகையே கையில் வைத்திருப்பது போல மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். குழந்தைக்கு பாலூட்டுவது இனி அவர்களின் அன்றாட கடமையாய் இருக்கும். இங்கு தாய்ப்பாலூட்டுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்க்கலாம்.

🙏1 பொது இடங்களில் பால் கொடுத்தல்🙏

பொது இடங்களில் இருக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட நேர்ந்தால், அது குறித்து வெட்கப்பட தேவையில்லை. இது தாய்மையின் இயற்கையான மற்றும் அழகான ஒரு பகுதி, இதில் நீங்கள் அவமானப்பட எதுவுமில்லை. அனைவரும் உங்களை உற்று பார்ப்பதை போல் இருந்தால், நீங்கள் அவர்களை பார்ப்பதை தவிர்த்திடுங்கள். உங்கள் ஆரோக்கியமான குழந்தையை பற்றி மட்டும் சிந்தியுங்கள். எப்படி குழந்தைக்கு பொது இடங்களில் பால் கொடுப்பது என்று தோன்றினால், கண்ணாடி முன்னாடி பால் கொடுத்து, துணிகளை பயன்படுத்தி கற்றுக் கொள்ளுங்கள்.

🙏2 ஆடைகள்🙏

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அதற்கு தகுந்தாற் போல் ஆடைகள் அணிவது அவசியம். அவை உங்களுக்கு வசதியானதாகவும் இருக்க வேண்டும். இப்போது தாய்ப்பாலூட்டும் தாய்களுக்கெனவே, ஆடைகள், இரவு உடைகள் மற்றும் உள்ளாடைகள் போன்றவை பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கின்றன. குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு எதுவாக, துணி மற்றும் துண்டுகளை பயன்படுத்துங்கள்.

🙏3 பயிற்சி🙏

நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், அதுவே பயிற்சியாகி உங்களுக்கு எளிமையான ஒன்றாக மாறி விடும். இது முதல் சில வாரங்களுக்கு கடினமான ஒன்றாக தோன்றினாலும், உங்கள் உடல் விரைவில் அதற்கு பழகி கொள்ளும். குழந்தைக்கு பால் கொடுக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள், உங்கள் உடல் அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதால், குழந்தைக்கு போதுமான பால் கிடைத்து விடும்.

🙏4 ஈரப்பதம்🙏

நீங்கள் பால் கொடுக்காத தருணங்களில், உங்கள் மார்பக காம்புகளில் ஈரப்பதத்தை தக்க வைக்க அதற்கென பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் வெண்ணை போன்றவற்றை பயன்படுத்துங்கள். மேலும் ஆலிவ் எண்ணெய் மற்றும் உங்கள் தாய்ப்பாலே கூட ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. நீங்கள் இந்த ஈரப்பத மூட்டிகளை உபயோகித்து, பின் குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் அவற்றை கழுவ வேண்டிய அவசியம் இல்லை.🙏 

🙏5 தண்ணீர் குடித்தல்🙏

நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது, உங்கள் உடலில் கட்டாயம் நீர் சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு அருகில் தண்ணீர், சில ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பால் பொருள்கள் போன்றவற்றை அருகில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

🙏6 உணவு🙏

தாய்ப்பாலூட்டும் சமயத்தில் போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்து உங்களிடம் இருந்தே பெறப்படுகின்றன. நீங்கள் தாய்ப்பாலூட்டுவதானல் உங்கள் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களோடு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான உணவை சாப்பிடவில்லை எனில், உங்களுக்கு சோர்வு மற்றும் மந்த நிலையை ஏற்படுத்தும்.

🙏7 ஒப்பிடுதல்🙏

மற்ற அம்மாக்களுடன் உங்களை ஒப்பீடு செய்வதை தவிர்க்கவும். ஒவ்வொரு அம்மாவுக்கும் தாய்ப்பால் உற்பத்தி மாறுபடும். சிலருக்கு குறைவான தாய்ப்பாலும், சிலருக்கு அதிகமான தாய்ப்பாலும் உற்பத்தியாகும். சில அம்மாக்களுக்கு தாய்ப்பாலூட்டும் போது வலி ஏற்படும். ஆனால், சிலருக்கு அப்படி எதும் ஏற்படுவதில்லை. தாய்ப்பாலூட்டும் போது அதிக வலி ஏற்பட்டால், தாய்ப்பாலூட்டுவதை சற்று குறைத்து ஃபார்முலா பாலை கொடுக்கலாம்.

🙏8 கணவரின் உதவியை நாடுதல்🙏

உங்கள் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுப்பதை விட அதிக விஷயங்களில் கணவரால் உதவ முடியும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கான இடைவெளியில் தலை மற்றும் காலில் மசாஜ் செய்வது, சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது போன்றவை உங்களை ஓய்வாகவும், வசதியாகவும் உணர செய்யும். அவர்கள் இது போன்ற சமயத்தில் உங்கள் உற்ற நண்பராக இருப்பார்.🙏

Comments