பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு அனுமதி - ஆயுஷ் அமைச்சகம்

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்தை, நோய்எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதை கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்கக்கூடாது என்றும் அது நிபந்தனை விதித்துள்ளது. கொரோனாவை குணமாக்கும் மருந்து என கடந்த 22 ஆம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபாராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்து குறித்து பல கேள்விகளை எழுப்பிய ஆயுஷ் அமைச்சகம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது.

இந்த நிலையில், கொரோனில் மருந்து கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கூறியதில்லை என்றும், கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றே கூறியதாகவும் பதஞ்சலி நேற்று விளக்கமளித்தது

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்தை, நோய்எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதை கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்கக்கூடாது என்றும் அது நிபந்தனை விதித்துள்ளது. கொரோனாவை குணமாக்கும் மருந்து என கடந்த 22 ஆம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபாராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்து குறித்து பல கேள்விகளை எழுப்பிய ஆயுஷ் அமைச்சகம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது.

இந்த நிலையில், கொரோனில் மருந்து கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கூறியதில்லை என்றும், கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றே கூறியதாகவும் பதஞ்சலி நேற்று விளக்கமளித்தது...

Comments