ஹிட்லரின் க.ழி.ப்.ப.றை சாவியை 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

ஹிட்லரின் க.ழி.ப்.ப.றை சாவியை 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

பிரித்தானிய விமானி ஒருவரால் 76 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் க.ழி.வ.றை சாவி, நினைத்த பார்க்க முடியாத தொகைக்கு ஏலம் போயுள்ளது.
பிரித்தானியாவின் கெண்ட் நகரில், சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆன்லைன் ஏலதாரர்கள் கலந்து கொண்ட, இந்த ஏலத்தில், குறித்த சாவியானது, சுமார் 14,000 பவுண்ட்டிற்கு ஏலம் போயுள்ளது.

இது 300 பவுண்ட்டிற்கு ஏலம் போவது பெரிய விஷயம் என்று நினைத்து பார்த்த நிலையில், இந்த தொகை அந்த நபருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இரண்டாம் உலகப்போரின் முடிவில் Berlin விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர், ஹிட்லரின் க.ழி.வ.றை சாவியை கண்டுள்ளார்.விமான, Lieutenant A.A Williams என்று அறியப்படும் அந்த நபர், இந்த சாவியை ஒரு நினைவுப் பொருளாகாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார். அதன் படி அது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.


அதில், கடந்த 1945-ஆம் ஆண்டு ஹிட்லரின் சொந்த மேசையின் டிராயரில் இருந்து, அவர் பயன்படுத்தி வந்த சொந்த க.ழி.ப்.பறை சாவியை எடுத்தேன், உலோகத்தால் இது ஆனது என்று குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து இது கடந்த 1980-90-களில் லண்டனில் இருக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இதைக் கண்ட தனியார் சேகரிப்பாளர்(அரியவகை பொருட்களை வாங்கி சேர்ப்பவர்) ஒருவர் வாங்கியுள்ளார்.இப்போது அதை, அவர் Ashford with C&T ஏலத்தில் விற்றுள்ளர். இதை அவர் வெறும் 300 பவுண்ட்டிற்கு தான் ஏலம் போகும் என்று நினைத்துள்ளார்.ஆனால், அவர் நினைத்து பார்த்ததை விட அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.பிரித்தானியாவின் கெண்ட்டில் நடந்த இந்த ஆன்லைன் ஏலத்தில், பிரித்தானியவை சேர்ந்த ஏலதாரர்கள் மற்றும் ஜேர்மனை சேர்ந்த சிலரும் இதை வாங்க போட்டி போட்டதால், இதன் ஏல விலை கடுமையாக உயர்ந்தது.


இது குறித்து Ashford with C&T நிபுணர் மத்தேயு ட்ரெட்வென் கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆன்லைன் ஏலதாரர்கள் இதை வாங்க கடுமையாக போட்டி போட்டதால், இதன் விலை இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. நாங்கள் கொடுத்த மதிப்பீட்டு தொகையை விட அது இவ்வளவுக்கு விற்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது,இதனால் நாங்களும் விற்பனையாளரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், என்று கூறியுள்ளார்.

Comments