எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு புதிய திட்டம். வந்தாச்சு.!

எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு புதிய திட்டம்..!

உலக நாடுகளைப் போலவே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு அதிகளவிலான ஆதரவு அளித்து வரும் நிலையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு எலக்ட்ரிக் கார், பைக் வாங்க திட்டமிட்டு உள்ளோருக்கு மிகப்பெரிய சர்பரைஸ் அளித்துள்ளது.புதிய கார் மற்றும் பைக்பொதுவாகப் புதிய கார் மற்றும் பைக் வாங்கும் போது ஒரு பெரும் தொகையை ரெஜிஸ்ட்ரேஷனுக்காகச் செலுத்துவோம். 
ஆனால் தற்போது புதிதாக பேட்டரி கார் மற்றும் பைக் வாங்குவோருக்குப் பதிவு கட்டணம் என்பது முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு புதிய திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.



கட்டணங்கள் ரத்து

இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கியவர்கள் ஆர்சி ரினிவல் கட்டணமும் ரத்து செய்யப்படவும் இத்திட்டத்தின் சேர்க்கப்பட்டு உள்ளது. 


இத்திட்டம் மத்திய அரசின் ஆலோசனைக்குப் பின்பு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் பட்சத்தில் நடைமுறைக்கு வரும்.எல்கட்ரிக் வாகனங்கள் விற்பனைரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், ஆர்சி ரினிவல் கட்டணம் ரத்து செய்வதன் மூலம் அதிகளவிலான மக்கள் எல்கட்ரிக் வாகனங்கள் வாங்கக் கூடும். 

இதனால் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைப் பெரிய அளவில் குறைக்க முடியும்.


நாடாளுமன்ற ஒப்புதல்

  இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தினால் இந்தியச் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும், இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும்.


பேட்டரி தயாரிப்பு

இதேபோல் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிப்புக்கு அடித்தளமாக விளங்கும் பேட்டரி தயாரிப்புக்கு அதிகளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.

Comments