உலகிலேயே அதிக விலையுள்ள விஷம் – காரணம் இதுதான்!உலகிலேயே அதிக விலையுள்ள விஷம் – காரணம் இதுதான்!

உலகிலேயே அதிக விலையுள்ள விஷம் – காரணம் இதுதான்!


தேள்களில் ஒரு வகை இனமான டெத் ஸ்டாக்கர் (Deathstalker) எனப்படும் கொலைகார தேள்கள் தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான தேள்கள் இனம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவை ஆபத்தானதாக இருக்கக் காரணமான அந்த விஷம் தான் உலகிலேயே அதிக விலையுயர்ந்த திரவங்களில் முதல் இடத்தில் உள்ள திரவம்.


தேளின் உடலில் ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் இருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் இருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.



விலை
அப்படியென்ன விலை தெரியுமா? இந்த தேளின் ஒரு கலன் விஷம், 39 மில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இன்றைய இந்திய ருபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 276.50 கோடி ருபாய்! ஒருவேளை உங்களிடம் இதை வாங்குவதற்கான பணம் இருந்தாலும் கூட நீங்கள் நினைத்த அளவு இந்த விஷத்தை வாங்க முடியாது என்பதே உண்மை. இதற்கான தேவை அதிகம் என்பதால் உங்களுக்கு குறைவான அளவு தான் கிடைக்கும். 130 டாலர்கள் கொடுத்தாலே ஒரு சர்க்கரையை விட குறைவான அளவு தான் கிடைக்கும்.

சிக்கல்கள்
ஒரு விஷத்திற்கு இவ்வளவு விலையிருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இதற்கு முக்கிய காரணம் இதில் காணப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த புரதங்கள். அதே சமயம் இந்த விஷத்தை பெறுவது மிகவும் கடினம். பொதுவாக தேளின் விஷத்தை மனிதர்கள் கைகளால் மட்டுமே எடுக்கின்றனர் என்பதால் அவ்வளவு எளிதாக எடுக்க முடிவதில்லை. மேலும் ஒரு தேளிடம் ஒரு முறை விஷம் எடுக்கும் போது வெறும் 2 மில்லிகிராம் அளவு விஷத்தை தான் கொடுக்கும். அப்படிப்பார்த்தால்
அப்படிப்பார்த்தால் ஒரு தேளிடம் இருந்து ஒரு கலன் விஷம் பெற, 2.64 மில்லியன் தடவை விஷம் எடுக்க வேண்டும். கூடவே விஷத்தை எடுக்கும் போது மனிதர்கள் தாக்கப்படும் அபாயமும் உள்ளது. ஒரு கொடுக்கு அதாவது ஒரு துளி விஷம் என்பது மனிதனை உடனே கொல்லாது என்றாலும் நிச்சயம் பாதிக்கும். அதிகமாக வலி இருக்கும்.

scorpion Milking


மருத்துவ பொருட்கள்
டெத் ஸ்டாக்கர் தேள்களின் விஷத்தில் டன் கணக்கில் மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், புற்றுநோய், குடல் அழற்சி நோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்களை தேளின் விஷத்தில் இருக்கும் புரதங்களைக் கொண்டு குணப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக இந்த விஷத்தில் உள்ள குலோரோடாக்சின்ஸ் (Chlorotoxins) – இது மனிதனின் முதுகெலும்பு மற்றும் மூளையில் இருக்கும் புற்றுநோய் செல்களுடன் இணைவதற்கு ஏற்ற சரியான அளவில் இருக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் கட்டிகளின் அளவு மற்றும் இருப்பிடத்தை கண்டறிய முடிகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷத்தில் இருக்கும் ஸ்கார்பைன் (scorpine) என்னும் பொருளைக் கொண்டு கொசுக்களில் இருக்கும் மலேரியாவை உண்டுபண்ணும் ஒட்டுண்ணிகளை நீக்க பயன்படுத்துகின்றனர். கலியோடாக்சின் (Kaliotoxin) என்னும் பொருள், எலும்பு நோய்களுடன் போராட எலிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் இதனைக் கொண்டு மனிதர்களின் நோய்களைக் கூட தீர்க்க முடியும்  என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் கூட உள்ளனவாம்.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பு  போன்றவை ஏற்படாது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை எல்லாம் தேளின் விஷத்தில் இருந்து இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சில மருத்துவ பொருட்கள் தான். அவர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்யும் போது தான் இந்த விஷத்தின் பல பயன்கள் தெரிய வரும்.

Comments